சென்னையில் வேகமாகப் பரவும் அரேபிய உணவு கலாசாரம் (காணொளி)

அரபு உணவுக்கூடங்கள் என்பது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் முன்னதாகவே அறிமுகமான ஒன்றுதான்.

நூற்றுக்கணக்கான பிரத்யேக அரேபிய உணவுக்கூடங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வந்திருக்கின்றன.

ஆனாலும், தமிழகத் தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அவற்றின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறிப்பாக, ஷவர்மா என அழைக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படும் துரித உணவு கூடங்கள் சென்னையில் பெருகி வருகின்றன.

துரித உணவு கலாச்சாரத்திற்கு மாறி வரும் இளைய தலைமுறையினர் பலர் தற்போது இந்த உணவை அதிகம் ரசிக்க துவங்கியுள்ளனர்.

பிரியாணி, புலாவ் போன்ற அரிசியால் ஆன அரேபிய உணவு வகையான 'கப்ஸா' என்கிற அசைவ உணவும் பிரசித்தி பெற்று வருகின்றது.

அதே சமயம் அரேபிய நாடுகளின் பாரம்பரிய இனிப்பு வகைகளும், அவர்களது சிறப்பு தேனீர் வகைகளையும் விற்பனை செய்யும் கூடங்கள் கூட சென்னையின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் காணப்படுகின்றன.

(சென்னையில் வேகமாகப் பரவும் அரேபிய உணவு கலாசாரம் பற்றிய காணொளித் தொடரை தயாரித்து வழங்குபவர் சென்னைச் செய்தியாளர் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்)