போராடி வென்ற ரஜினி ரசிகர்கள்
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது 'கபாலி' திரைப்படத்தை காண பெங்களூரில் இருந்து வந்திருந்த ரஜினி ரசிகர்கள் தங்களுக்கு அளித்த உறுதிமொழியின்படி, சத்யம் திரையரங்கில் படத்தைக் காட்டாமல், பிரசாத் லேப்பில் படம் பார்க்குமாறு கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'8 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, பிரசாத் லேபில் படம் பார்க்கவா பெங்களூரிலிருந்து வந்தோம்?’ என்று ஆவேசப்பட்டனர்.
திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என அவர்கள் உறுதியாக இருந்தனர். முதலில் அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
திரையரங்கில் படம் பார்க்க வேண்டுமானால், பகல் 12 மணி வரை காத்திருக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதற்கு பெங்களூர் ரசிகர்கள் சம்மதித்தனர்.
அதையடுத்து, படம் பார்ப்பதற்காக அவர்கள் அனைவரும் சத்யம் திரையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்கள்.