கிரிக்கெட்டில் சாதிக்க தாய்மை தடையல்ல: நேஹா தன்வர்

இருபத்து ஒன்பது வயதான நேஹா தன்வர் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணிக்காக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை.

ஆனால் இந்த விளையாட்டை விட்டுவிட்டு பிள்ளைப்பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் அந்த விளையாட்டின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தற்போது மீண்டும் அவர் விளையாடத் தொடங்கியுள்ளார்.

சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரராக தான் கடந்து வந்த பாதையைப் பற்றி பிபிசியிடம் அவர் விரிவாக பேசியுள்ளார்.

அவர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி.