ஓட்டுநரே இல்லாமல் ஓடும் டெஸ்லா மின்சார கார்கள்

தொலைவில் இருந்தபடி உரிமையாளர்களின் அழைப்பை ஏற்று ஓடி வரக்கூடிய, ஓட்டுநரே இல்லாத, முழுமையாக தானாக ஓடும் டெஸ்லா மின்சார கார்கள், இன்னும் சில ஆண்டுகளில் தயாராகிவிடும்.

பேப்பால் என்கிற இணையவழி பண பரிவர்த்தனையை உருவாக்கியதன் மூலம், கோடீஸ்வரரான எலன் மஸ்க் என்பவர், அப்படியான கார்களை உருவாக்குவதிலும், விண்வெளிப் பயணத்துறையிலும் தனது அடுத்த முதலீட்டை செய்து வருகிறார்.

தனது எதிர்காலத் திட்டங்களை பிபிசியின் ரோரி செல்லன் ஜோன்ஸுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.