பருவநிலை மாற்றம்: சீனாவின் போக்கில் புதிய திருப்பம்
பாரிஸில் நடந்துவரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, உலகின் காடுகளை பாதுகாப்பது பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் நடக்கின்றன.
கடந்த முறை பருவநிலை மாநாட்டின்போது, உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நாடான சீனா, கடுமையான நடவடிக்கைகளை இலக்குகளாக நிர்ணயிப்பதற்கு இணங்கி இருக்கவில்லை.
ஆனால், சீனா இப்போது தனது போக்கை மாற்றிக்கொண்டு, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு பெரிய திட்டங்களை கொண்டுவருகின்றது.