ஹெய்ட்டியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பிடங்கள்- காணொளி
ஹெய்ட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு காலரா தொற்றுநோய்க்கு 9 ஆயிரம் பேர் பலியானார்கள்.
இந்த நோய் பரவுவதற்கு அழுக்கடைந்த நீரும் அசுத்தமான சுற்றுச்சூழலுமே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
இங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சுகாதாரத்தை பேணுவதற்காக சுற்றுச்சூழலுக்கு சாதகமான கழிப்பிடங்களை தொண்டுநிறுவனம் ஒன்று அமைத்துவருகின்றது.
ஒவ்வொரு தடவை பயன்படுத்திய பின்னரும், கரும்புச் சக்கையை மேலே போட்டுவிடுவதன் மூலம் கிருமித் தொற்று அபாயத்தை குறைப்பது தான் இந்த கழிப்பறையில் உள்ள வித்தியாசம்.
அதன்பின்னர், மலக்கழிவுகள் ஒரு இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, கடுமையான வெப்பத்தின் மூலம் அபாயமான பக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும்.
இந்தக் கழிவுகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த கழிப்பிடங்கள் நோய்கள் பரவாமல் தடுக்கின்றமை மட்டுமன்றி, நீண்டகாலப் போக்கில் நாட்டின் விவசாயத்துறைக்கு நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.