செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலன் அனுப்ப ஐக்கிய அரபு எமிரேட் முடிவு-காணொளி

செவ்வாய்க்கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன் ஒன்றை 2021ம் ஆண்டு வாக்கில் அனுப்பப்போவதாக ஐக்கிய அரபு எமிரேட்டுகள் அறிவித்திருக்கிறது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற தேசிய விண்வெளி நிறுவனம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது.

இதை விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்லாமிய உலக நாடுகளின் முதல் முயற்சியாக ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அதிபர் வர்ணித்தார்.

செவ்வாய்க்கிரகத்தை அடைவதற்கான 60 மிலியன் கிமீ பயணம் ஒன்பது மாதங்கள் பிடிக்கும்.