சந்திரப்பூரில் சிறுத்தை செய்த அட்டகாசம் - காணொளி
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சந்திரப்பூர் என்னும் ஊரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை செய்த அட்டகாசம் அங்கு அனைவரையும் சில மணிநேரம் ஆட்டிவைத்துவிட்டது.
வீட்டுக்குள் புகுந்த அந்தச் சிறுத்தையை பிடிக்க முயன்ற வன அதிகாரிகளை அது தாக்கவந்துள்ளது.
ஒருவருக்கு அவரது பின்புறத்தில் அந்தச் சிறுத்தை கடித்தும் விட்டது.
ஒரு வீட்டின் குளியலறைக்குள் இருந்த அந்தச் சிறுத்தையைப் பிடிக்க 4 மணிநேரம் பிடித்திருக்கிறது.
அதுவரை அந்த ஊரே உறைந்துபோய்க் கிடந்துள்ளது.
இது குறித்த காணொளி.