பிரிட்டனில் கஞ்சா வளர்க்க கடத்தி வரப்படும் வியட்நாமியர்கள் - காணொளி

பிரிட்டனுக்கு சட்ட விரோதமாக குடியேற வருபவர்கள் பலர் பல மாதங்கள் அல்லது வருடங்கள் பயணித்தே இங்கு வந்து சேருவதாக பிபிசியினால் நடத்தப்பட்ட ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களை இங்கு சட்ட விரோதமாகக் கடத்தி வரும் கும்பல்கள் அந்தப் பயணத்தில் அவர்களை அடிமைகளாக நடத்துவதாகவும், அவர்கள் அந்தக் காலத்தில் பெரும் வன்செயல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 1700 பேர் இவ்வாறு கடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

அதற்கு முதல் ஆண்டை விட இது 47 வீதம் அதிகமாகும். ஆனால், இது மிகவும் குறைவான மதிப்பீடு என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இவற்றை தடுப்பதற்காக அரசாங்கம் அடிமை எதிர்ப்பு குழுவை துறைமுகங்களில் நிறுத்தியிருக்கும் அதேவேளை, அங்கு வரும் லாறிகள் மற்றும் வாகனங்களில் சோதனைகளை மேலும் அதிகமாக்குமாறு பிரிட்டிஷ் எல்லை மற்றும் குடிவரவு தலைமை பரிசோதகர் கோருகிறார்.

அது குறித்த காணொளி.