மனிதனால் குரங்குக்கு வந்த நீரிழிவு நோய்..

நத்தார் மற்றும் புதுவருட காலத்தில் எமது வீட்டுச் செல்லப் பிராணிகளுக்கும் சுவையான உணவுகளையெல்லாம் கொடுத்து உபசரிக்கத்தான் வேண்டும்.

ஆனால், சில வீட்டுப் பிராணிகளுக்கு தவறான வகையான உணவுகளைக் கொடுத்தால் அவற்றின் உடல் முற்றாக பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுவிடுகின்றது.

இங்கு ''கோர்ண்வால்'' விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும் மூன்றில் ஒரு குரங்குகள், அவை வீட்டுப் பிராணிகளாக இருந்த போது பொருத்தமற்ற உணவுகளை உண்டதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ''வைல்ட் ஃபியூச்சர்'' என்னும் தொண்டர் அமைப்பு கூறுகிறது.

இந்த நிலையில் குரங்கு வகைகளை வீட்டுச் செல்லப் பிராணிகளாக வைத்திருப்பதை தடுக்க வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராயத் தொடங்கியுள்ளது.

இது குறித்த காணொளி.