"சிவாஜி சிலையை அகற்றினால் போராட்டம்"
சிவாஜி கணேசனின் சிலையை வைப்பதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று முந்தைய திமுக ஆட்சி நீதிமன்றத்தில் கூறியுள்ளது என்றும் அரசியல் உள்நோக்கம் காரணமாகவே அந்த சிலையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி நடப்பதாகவும் சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் கே வி பி பூமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தச் சிலை வைக்கப்பட்டபோது, அப்போது அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர் இதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறியுள்ளதாகவும் பூமிநாதன் கூறுகிறார்.
சென்னை அண்ணா சாலையிலுள்ள எம் ஜி ஆர் அவர்களின் சிலை அகற்றப்படுமாயின், சிவாஜி சிலையையும் வேறு இடத்துக்கு அகற்றுவதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
சிவாஜி கணேசனின் சிலை இப்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்றப்பட்டால் அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் பூமிநாதன் கூறினார்.