இலங்கை அரசின் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்?

இலங்கையில் டெங்கு நோயினால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 12,500 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளையும் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் டெங்கு நோயை ஒழிக்க அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

இலங்கை சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு குற்றச்சாட்டை மறுக்கிறது.