2 ஜி வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க மனு

இந்தியாவை உலுக்கிய இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை தொடர்பான வழக்கில் உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வைத்த கோரிக்கையை இது தொடர்பான சிபிஐயின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து சுவாமி இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டார் நமது புது தில்லி செய்தியாளர் தங்கவேல்.