நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்
தங்கள் படையினர் இன்னும் அந்த நகரத்தில் இருப்பதாகவும் விரைவில் தாலிபன்களை வெளியேற்றுவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்

பட மூலாதாரம், Getty Images
வடக்கு ஆப்கானித்தானில் உள்ள ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபெர்கானை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் தாலிபன்கள் வசம் சென்றுள்ள இரண்டாவது மாகாணத் தலைநகர் இதுவாகும்.
தங்கள் படையினர் இன்னும் அந்த நகரத்தில் இருப்பதாகவும் விரைவில் தாலிபன்களை வெளியேற்றுவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று தாலிபன்கள் நிம்ரோஸ் மாகாண தலைநகரான சராஞ் நகரைக் கைப்பற்றினர்.
சமீப வாரங்களில் தாலிபன்கள் ஆஃப்கனின் பல பகுதிகளையும் வசப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.
இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மாநில அரசு சன்மானம் அறிவித்துள்ளது.
நீரஜ் சோப்ரா சாதனையைப் பாராட்டி 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கத்தார் அறிவித்துள்ளார்.
ஜானவி மூலே, டோக்கியோவில் இருந்து
சிறிய வேறுபாட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த மில்கா சிங் உள்ளிட்ட அனைத்து தடகள வீரர்களுக்கும் தமது தங்கப் பதக்கத்தை அர்ப்பணம் செய்வதாக ஒலிம்பிக் தங்கம் வென்ற பின் நீரஜ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு 'ட்ரேக்' தமக்கு கடவுள் போன்றது என்றும் போட்டிக்கு பிறகு அதன் முன் தலை வணங்கியதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
டோக்யோ ஒலிம்பிக்கில் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. இன்று நீரஜ் சோப்ரா சாதித்தது என்றைக்கும் நினைவு கோரப்படும். மிக இளம் வீரரான நீரஜ் சோப்ரா மிக பிரமாதமாக் செயல்பட்டு இருக்கிறார். தங்கம் வென்றதற்கு என் வாழ்த்துக்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை.
மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர். அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்துக்கான நிலையைத் தக்க வைத்துக் கொண்டார்.
வழக்கமாக 90 மீட்டர் தொலைவைத் தாண்டி எறியும் ஜெர்மனி ஜோகன்னஸ் வெட்டர் தனது முதல் முயற்சியில் 82 மீட்டர் தொலைவு மட்டும் எட்டினார். அடுத்த முயற்சி ஃபவுலாக அமைந்ததால் தொடர்ந்து பின்தங்கினார். மூன்று முயற்சிகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிக்க முடியாததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதே நேரத்தில் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார் நீரஜ் சோப்ரா. முதல் மூன்று முயற்சிகளிலும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறியும் உத்தியில் எந்தத் தவறும் ஏற்படவில்லை.
முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவின் தொலைவை வேறு எந்த வீரராலும் எட்ட முடியவில்லை. போட்டியாகக் கருதப்பட்ட வெட்டல் வெளியேறிய நிலையில், ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜூலியன் வெபர் மற்றும் செக் குடியரசின் விட்டேஸ்லேவ் வெஸ்லி ஆகியோர் மட்டுமே 85 மீட்டர் தொலைவுக்கு அதிகமாக வீசியிருந்தனர்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் மொத்தம் 12 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு முதலில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அதிகபட்சத் தொலைவு கணக்கில் கொள்ளப்படும். மூன்று முயற்சிகள் முடிந்த பிறகு முதல் எட்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு மொத்தமாக சிறந்த தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.
முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவைத் தவிர வேறு யாரும் 86 மீட்டர் தொலைவைக்கூட எட்டவில்லை. ஆனால் அதற்கடுத்த மூன்று முயற்சிகளில் செக் குடியரசின் மற்றொரு வீரரான ஜேக்கப் 86.67 மீட்டர் தொலைவுக்கு வீசி நீரஜ் சோப்ராவை நெருங்கினார். அதே நேரத்தில் நீரஜ் சோப்ராவின் அடுத்தடுத்த இரண்டு முயற்சிகளும் ஃபவுலாக முடிந்தன.
அதனால் அவரால் தனது நிலைமை மேம்படுத்திக் கொள்ள முயவில்லை. எனினும் தங்கப் பதக்கத்துக்கான தனது நிலையை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தார். கடைசி வாய்ப்பில் எந்த அதிர்ச்சியான முடிவுகளும் வரவில்லை.
ஜெர்மனியின் வெபரால் எவ்வளவோ முயன்றும் பதக்கத்துக்குள் வர இயலவில்லை. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை முதல் இடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார்.
நீரஜ் சோப்ராவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி. கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர் 90.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போது வெள்ளிப் பதக்கத்துக்கான தொலைவு 88.24 மீட்டர். கென்யாவின் ஜூலியஸ் யெகோ அந்தத் தொலைவை எட்டியிருந்தார். ஆனால் டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தத் தொலைவை எந்த வீரரும் எட்டவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா சார்பாக ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் டோக்யோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப் பட்டியலில் உயர்த்தியுள்ளார்.
நீரஜ்ஜின் பதக்கத்தையும் சேர்த்து இதுவரை இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம்.
சில மணி நேரங்களுக்கு முன்பு தான் பஜ்ரங் புனியா, வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
சில தினங்களுக்கு முன்பு தான் ரவிகுமார் தஹியா இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுக் கொடுத்தார். அதோடு சேர்த்து மல்யுத்தத்தில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இது.
பஜ்ரங் புனியா வென்ற பதக்கத்தையும் சேர்த்து இந்தியா மொத்தம் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
இன்று மாலை ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே செலுத்தினால் போதும். இத்துடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஐந்து கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகாலப் பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் - வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயாலஜிகல் - இ நிறுவனத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இந்தத் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.
பதக்க வாய்ப்பை ஒருசில சென்டிமீட்டர்களில் தவறவிட்ட இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் டோக்யோவில் பத்திரியாளர்களிடம் பேசியபோது,
“என்னால் முடிந்தவரை சிறப்பாக விளையாடினேன். இருப்பினும் பதக்க வாய்ப்பு தவறிப் போனது வருத்தமளிக்கிறது.” என்று தெரிவித்தார்.
மேலும் “ஒலிம்பிக்கை பொறுத்தவரை நீங்கள் நான்காவது இடமா அல்லது ஐந்தாவது இடமா என்பது விஷயமல்ல. அனைவரும் இங்கு பதக்கத்திற்காகதான் வருகிறார்கள்”
அதேபோன்று ஒலிம்பிக்கில் 5 இடங்களுக்குள் இருப்பதும் 10 இடங்களுக்குள் இருப்பதும் முக்கியமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
“யாரேனும் ஒருவர் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் முடித்தால் அவர்கள் பதக்கம் வாங்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள்.” என்றார்.
தான் கோல்ப் விளையாட தொடங்கும்போது ஒலிம்பிக் வரை வருவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்றார்.
மேலும் தான் இவ்வளவு தூரம் பயனித்தது கோஃபை மேலும் பிரபலமாக்கும் என நம்புகிறார் அதிதி.
ஆபாசப் பட விவகாரத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ் குந்த்ராவை விடுவிக்க மறுத்துவிட்டது பாம்பே உயர் நீதிமன்றம். இவர் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆவார்.
தங்களுடைய செயலிக்காக எடுக்கப்படும் படங்களில் நடிகைகள் எப்படி ஆபாசமாக ஆடை அணியவேண்டும் என்பது தொடர்பாக இவர் பகிர்ந்துகொண்ட கடிதம் தற்போது ஆவணமாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்மை ரிமாண்ட் செய்து சிறையில் அடைப்பதற்கு நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் குந்த்ரா.
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் சில சென்டி மீட்டர்களில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.அவர் சிறப்பாகப் போராடி 4-வது இடத்தை அடைந்தார்.
டோக்யோ ஒலிம்பிக்கில் அபாரமாக விளையாடியும் பதக்க வாய்ப்பை தவறவிட்டுள்ளார் இந்தியாவின் இளம் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்.
இறுதிச் சுற்றில் நான்காம் இடத்தில் ஆட்டத்தை முடித்த அதிதி அசோக்கின் பதக்க வாய்ப்பு சில சென்டிமீட்டர்களில் தகர்ந்தது.
தொடர்ந்து அனைத்து சுற்றுகளிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்த அதிதி நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது,
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மோசமான வானிலையால் நிறுத்தப்பட்டிருந்த கோல்ஃப் போட்டி 49 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அதிதி அசோக் தொடர்ந்து பதக்கத்திற்கான போட்டியில் உள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
டோக்யோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன், கோல்ஃப் விளையாட்டு அல்லது அதிதி அசோக்கின் பெயர் , பதக்கம் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு அல்லது வீரர்களின் பட்டியலில் இல்லை.
ஆனால் இப்போது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது, இந்தியாவின் 23 வயதான கோல்ப் வீராங்கனை அதிதி, பதக்க நம்பிக்கையை எழுப்பியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த அதிதி, கடந்த சில ஆண்டுகளாக கோல்ஃப் விளையாட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார், இருப்பினும் இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது கோல்ஃப் பற்றி ஊடகங்களில் அதிகமாக பேசப்படுவதில்லை..
அதிதி, 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றிருந்தாலும், அப்போது அவர் பள்ளிப்படிப்பைத்தான் முடித்திருந்தார். பதின்பருவத்தில் இருந்தார். ஒலிம்பிக்கில் மகளிர் கோல்ஃப் போட்டியில் வயதில் இளைய வீரராக இருந்தார்.

பட மூலாதாரம், Photo by KAZUHIRO NOGI/AFP via Getty Images
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கு பெறும் கடைசி நாள் இன்று.
இருப்பினும் இன்று இந்தியாவின் கோல்ஃப் விளையாட்டில் அதிதி அசோக், மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. 2 வெள்ளிப் பதக்கம் மற்றும் மூன்று வென்கலப் பதக்கங்கள்.
பளுதூக்குதலில் மீராபாய் சானுவும், மல்யுத்தத்தில் ரவி தஹியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளை இந்தப் பகுதியில் தொகுத்து அளிப்பவர் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகர்.