இந்தியா v இங்கிலாந்து - 27 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வந்தது; இந்தியாவை வென்றது இங்கிலாந்து
இங்கிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டும் எனும் நெருக்கடியில் களமிறங்கியது. இதுவரை உலகக் கோப்பையை தோல்வியே அடையாத ஒரே அணியாக வளையவந்த இந்தியாவை வென்று அரை இறுதி வாய்ப்பையும் தக்க வைத்தது இங்கிலாந்து.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இங்கிலாந்து வெற்றி
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோனி 31 பந்துகளில் நான்கு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஹர்டிக் பாண்ட்யா அவுட்
பிளங்கட் பந்தில் ஹர்டிக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். ஜேம்ஸ் வின்சியிடம் ஹர்டிக் அடித்த பந்து பிடிபட்டது. 33 பந்துகளில் நான்கு பௌண்டரிகள் உதவியுடன் 45 ரன்கள் குவித்தார் பாண்ட்யா.
இந்திய அணி 30 பந்துகளில் 71 ரன்கள் எடுக்க வேண்டும். அதாவது ஓவருக்கு சராசரியாக 14 ரன்கள் தேவை. தோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்துள்ளார்.
ரன் ரேட் எகிறியது
ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணிக்கு தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்துள்ளது.
44 ஓவர்கள் முடிவில் இந்தியா நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா 36 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க வேண்டும்.
ஹர்டிக் பாண்ட்யா 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்துள்ளார். தோனி 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
ஹர்டிக் தான் துருப்புச் சீட்டு - முகமது கைஃப்
இங்கிலாந்து ஃபீல்டிங் மிகச்சிறப்பாக இருக்கிறது. பந்த் அடித்த பந்தை வோக்ஸ் கேட்ச் பிடித்த விதம் அபாரமானது. இந்த தொடரில் சிறந்த கேட்ச்களில் ஒன்று. ஹர்டிக் தான் துருப்புச் சீட்டு என ட்வீட் செய்துள்ளார் முகமது கைஃப்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ரிஷப் பந்த் அவுட்
பிளங்கட் பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.
40-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விளாச முயன்றார் பந்த். ஆனால் வோக்ஸ் தாவிக் கேட்ச் பிடித்து அவுட் செய்தார்.
ரிஷப் பந்த் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
தற்போது ஹர்டிக் பாண்ட்யாவுடன் இந்தியாவின் நட்சத்திர வீரர் தோனி இணைந்துள்ளார்.
இந்திய அணி வெற்றி பெற கடைசி பத்து ஓவர்களில் 104 ரன்கள் எடுக்க வேண்டும்.
இங்கிலாந்து கடைசி பத்து ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சதமடித்து ஆட்டமிழந்த ரோகித் ஷர்மா
சதமடித்து ஆட்டமிழந்த ரோகித் ஷர்மா பொறுமையாக ஆட்டத்தைத் துவங்கிய ரோகித் ஷர்மா பின்னர் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். 106 பந்துகளில் அவர் சதமடித்தார்.
ரோகித் ஷர்மா இந்த உலகக்கோப்பைத் தொடரில் அடிக்கும் மூன்றாவது சதம் இது.
கிறிஸ் வோக்ஸ் வீசிய 37-வது ஓவரின் முதல் பந்திலேயே பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரோகித் ஷர்மா.
இதையடுத்து ஹர்டிக் பாண்ட்யா இளம் வீரர் ரிஷப் பந்துடன் இணைந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி அவுட் - ரோகித் அரை சதம்
கே.எல்.ராகுல் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்ட விராட் கோலி - ரோகித் ஷர்மா இணை அதன்பின்னர்வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் முக்கியமான தருணத்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.
16 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.
தற்போது 29 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.
அடில் ரஷீத் வீசிய ஐந்து ஓவர்களில் இந்தியா 35 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
உலகக்கோப்பை தொடர்களில் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதமடித்தவர்கள் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்தார் கோலி.
ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக விளையாடிய ரோகித் ஷர்மா 65 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
ரோகித் -கோலி இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது.
ரோகித் 84 பந்துகளில் 77 ரன்களுடன் விளையாடி வருகிறார். பிளங்கட் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை தொடரில் மீண்டும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் கோலி.
ரோகித்துடன் ரிஷப் பந்த் தற்போது இணைந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
வோக்ஸ் ஹாட்ரிக் மெய்டன்
இந்தியா சேசிங்கை தொடங்கிய நிலையில் வோக்ஸ் ஹாட்ரிக் மெய்டன் வீசியுள்ளார். மேலும் ராகுல் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா தற்போது களத்தில் உள்ளனர்.
இந்தியாவுக்கு இலக்கு 338 ரன்கள்
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அரை சதம் கண்டார்.
ஸ்டோக்ஸ் கடைசி ஓவரில் ஃபிளிக் ஷாட் ஆடி கேட்ச் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். அவர் மூன்று சிக்ஸர்கள் ஆறு பௌண்டரிகள் உதவியுடன் 54 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் 47-வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவர் எட்டு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.
அவருக்குப் பின் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் ஐந்து பந்துகளில் ஏழு ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார்.
பும்ரா சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 10 ஓவர்கள் வீசி 44 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.
ஷமியின் கடைசி ஓவரில் இரண்டு பௌண்டரிகள் ஒரு சிக்ஸர்கள் உள்பட 14 ரன்கள் குவித்தார் ஸ்டோக்ஸ்.
பத்து ஓவர்கள் வீசிய ஷமி ஒரு மெய்டன் வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் 69 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
யுவேந்திர சாஹல் 10 ஓவர்கள் வீசி 88 ரன்கள் விட்டுக்கொடுத்தார். குல்தீப் யாதவும் 72 ரன்கள் கொடுத்தார். இவ்விரு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 20 ஓவர்களில் 160 ரன்கள்கொடுத்தனர்.
ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என இருவரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.
இந்திய அணி எட்டு ரன்களை மட்டுமே உதிரியாக கொடுத்தது. ''ஜேசன் ராய், பேர்ஸ்டோ அபாயகரமான இணை. அவர்கள் உலகின் எந்த ஆட்டக்களத்திலும் எந்த நேரத்திலும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர்கள். அதுதான் இந்த போட்டியிலும் நடந்தது'' என்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து அணியுடன் 2011 உலகக் கோப்பையில் விளையாடியது. அப்போது முதலில் பேட்டிங் பிடித்த இந்திய அணி 338 ரன்கள் எடுத்தது. சச்சின் சதமடித்திருந்தார். அந்த போட்டி டையில் முடிந்தது.
தற்போது இந்தியாவின் வெற்றிக்குத் தேவை 338 ரன்கள்.
பட மூலாதாரம், Getty Images
நடுவரிசை ஓவர்களில் இந்தியா ஆதிக்கம்
ஆட்டத்தின் 28 வது ஓவரில் இருந்து இங்கிலாந்தின் ரன்ரேட் குறையத் தொடங்கியுள்ளது. 28 - 37 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து ஒரு பௌண்டரியை கூட அடிக்கவில்லை.
28 -வது ஓவர் - மூன்று ரன்கள்
29-வது ஓவர் - இரண்டு ரன்கள்
30-வது ஓவர் - ஆறு ரன்கள்
31-வது ஓவர் - இரண்டு ரன்கள்
32-வது ஒவர் - ஒரு ரன் மற்றும் ஒரு விக்கெட் இழப்பு
33-வது ஓவர் - இரண்டு ரன்கள்
34 வது ஓவர் - விக்கெட் மெய்டன்
35-வது ஓவர் - நான்கு ரன்கள்
36-வது ஓவர் - இரண்டு ரன்கள்
37- வது ஓவர் - மூன்று ரன்கள்
38-வது ஓவர் - எட்டு ரன்கள்
யுவேந்திர சாஹல் வீசிய 38-வது ஓவரின் மூன்றாவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பௌண்டரி விளாசினார். இந்த 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது இங்கிலாந்து. 38 ஓவர்கள் முடிவில் 5.89 எனும் ரன் ரேட்டில் 224 ரன்கள் குவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்
ஆட்டத்தின் 32 வது ஓவரில் ஷமியின் நான்காவது பந்தில் பந்த்திடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோ அவுட் ஆனார்.
இங்கிலாந்தின் இரு தொடக்க வீரர்களும் தற்போது பெவிலியன் திரும்பியுள்ளனர்.
25 ஓவர்களில் 180 ரன்கள் குவிந்திருந்த இங்கிலாந்து, கடைசி ஆறு ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
ஜானி பேர்ஸ்டோ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எட்டாவது ஒருநாள் சதத்தை விளாசினார். 90 பந்துகளில் அவர் சதமடித்தார். எட்டு பௌண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் உதவியுடன் அவர் சதமடித்தார்.
ஜேசன் ராய் அவுட் ஆன பிறகும் இங்கிலாந்து 6.5 எனும் ரன்ரேட்டை தக்கவைத்து வருகிறது.
குல்தீப் யாதவ் இதுவரை வீசிய ஏழு ஓவர்களில் 64 ரன்கள் குவித்துள்ளது இங்கிலாந்து. ஆட்டத்தின் 30-வது ஓவரில் இங்கிலாந்து 200 ரன்கள் கடந்தது.
முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார். இதையடுத்து ஜோ ரூட் களமிறங்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை அஞ்சும் சோப்ரா ரவீந்திர ஜடேஜா அபாரமாக கேட்ச் பிடித்துள்ளார் என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். ''தாழ்வாக வரும் பந்தை தாவிப்பிடித்து கேட்ச் பிடிப்பது எளிதான காரியமல்ல'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
16-வது அரை சதம் கண்டார் ஜேசன் ராய்
ஆட்டத்தின் 17-வது ஓவரில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ஜேசன் ராய். இது அவரது 16-வது அரை சதம்.
41 பந்துகளில் அரை சதம் கடந்த ஜேசன் ராய் இதுவரை ஏழு பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
அரை சதம் கடந்ததும் அடுத்தப்பந்திலேயே சிக்ஸர் விளாசினார்.
சாஹல் - குல்தீப் இணை நிறைய ரன்களை கொடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பு வேகத்தை பார்க்கும்போது இன்றைய போட்டியில் இங்கிலாந்து நானூறு ரன்களை கடக்கக்கூடும் என நாக்மணி சின்ஹா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 141 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேர்ஸ்டோ இதுவரை 68 பந்துகளில் 77 ரன்கள் குவித்துள்ளார். இது அவரது 16-வது அரை சதம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சிக்சருடன் அரை சதம் நிறைவு செய்தார் பேர்ஸ்டோ
ஆட்டத்தின் 16-வது ஓவரை சாஹல் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட பேர்ஸ்டோ ஒரு சிக்சரின் மூலம் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
அதே ஓவரில் இறுதிப்பந்திலும் சிக்ஸர் விளாசினார் பேர்ஸ்டோ.
இங்கிலாந்து ஓவருக்கு ஏழு ரன்கள் வீதம் குவித்து வருகிறது.
இதுவரை ஐந்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்திவிட்ட விராட்கோலிக்கு இன்னமும் இங்கிலாந்தின் முதல் விக்கெட் கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பௌண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள்
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைக்க சிரமப்படுகின்றனர்.
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா மட்டும் நான்கு ஓவர்கள் வீசி எட்டு ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
சாஹல் இதுவரை 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யாவின் இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் குவித்துள்ளது இங்கிலாந்து.
14 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் குவித்துள்ளது.
பேர்ஸ்டோ 41 ரன்களுடனும் ஜேசன் ராய் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து நிதான ஆட்டம், முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட் இழக்கவில்லை
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் நிதானமாக ஆடிவருகின்றனர். முதல் ஐந்து ஓவர்களில் ஷமி, பும்ரா இணையை இவர்கள் நன்றாக கையாண்டனர். இதுவரை இங்கிலாந்து ஐந்து ஓவர்களை சந்தித்ததில் ஐந்து பௌண்டரிகளை விளாசியுள்ளது.
ஐந்து ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் குவித்தது. இந்நிலையில் ஆறாவது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கியுள்ளார் விராட் கோலி.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா?
புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 11 புள்ளிகள் பெற்று இந்தியா இரண்டாம் இடத்திலும், 11 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
இன்று இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் நான்காம் இடத்தை பிடிக்கும். இருப்பினும் அரையிறுதிக்கு செல்ல புதன்கிழமையன்று நியூசிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டியிலும் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் எங்களை ஆதரிக்கும் என நம்புகிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இங்கிலாந்து எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். பாகிஸ்தான் வங்கதேச அணியை வென்றாலும் அரை இறுதி வாய்ப்பு நனவாகிப்போகும் வாய்ப்பும் இருக்கிறது.