தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர்
சீன அதிபரை வழி அனுப்பியதை தொடர்ந்து, பிரதமர் மோதி டெல்லி புறப்பட்டார். திருவிடந்தையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்த பிரதமர் மோதி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோதியை ஆளுநர் புரோகித், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வழி அனுப்பினர்.





