58 அமைச்சர்கள்
நரேந்திர மோதி உள்பட 25 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
பிரதமர் உள்பட இந்தியாவின் மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 58ஆக உள்ளது.
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக மீண்டும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்க இருக்கிறார் நரேந்திர மோதி. இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நரேந்திர மோதி உள்பட 25 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
பிரதமர் உள்பட இந்தியாவின் மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 58ஆக உள்ளது.
அனுராக் தாக்கூர், சஞ்சய் சாம்ராவ், சஞ்சீவ் குமார் பல்யான், சாத்வி நிரஞ்சன் ஜோதி, இந்தியக் குடியரசு கட்சி (அத்வாலே)-இன் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, புருஷோத்தம் ரூபாலா, கிஷன் ரெட்டி, ராவ்சாஹேப் தான்வே, கிஷன் பால் குஜ்ஜார், வி.கே.சிங், ராவ் இந்தர்ஜித் சிங், பிரதாப் சந்திர சாரங்கி, ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக், அர்ஜுன் ராம் மேக்வால், அஸ்வினி குமார் சௌபே, மான்சுக் மன்டாவிய, ஹர்தீப் சிங் பூரி, ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
கிரெண் ரிஜிஜு, ஃபகன் சிங், அஸ்வினி குமார் சௌபே மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முந்தைய ஆட்சியில் இணை அமைச்சராக இருந்த கஜேந்திர சிங் செகாவத், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக இருந்த சந்தோஷ் குமார் கங்வார் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர்.
ஏற்கனவே அமைச்சராக இருந்த கிரிராஜ் சிங் அமைச்சர் பதவியேற்றுக்கொண்டார். பிகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட மாணவர் தலைவர் கண்ணையா குமாரை வென்றவர் இவர்.
பிரால்ஹாத் ஜோஷி, மஹேந்திரநாத் பாண்டே, சிவசேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் ஆகியோர் மத்திய அமைச்சர் பதவியேற்றுக்கொண்டனர்.
பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஸ்மிரிதி இரானி, ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜாவடேகர் ஆகிய மூவரும் இந்த முறையும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.

பட மூலாதாரம், ani
உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்ரியால் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பட மூலாதாரம், ANI
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கௌர் ஆகியோர் அமைச்சர்களாக பதவிஏற்றுக்கொண்டனர்.
பாஜகவைச் சேர்ந்த தாவர் சந்த் கெலோத்தும் மத்திய அமைச்சர் பதவியேற்றுக்கொண்டார்.
ரவி சங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு மத்திய அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து மோதியின் தாய் ஹீரா பென் தொலைக்காட்சியில் கண்டார்.

பட மூலாதாரம், ANI
நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மத்திய அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்.
காந்திநகர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பட மூலாதாரம், ANI
பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்

பட மூலாதாரம், ANI
இந்தியாவின் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார் நரேந்திர மோதி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரசகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பட மூலாதாரம், ANI
பிரதமராக பதவியேற்றுக் கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நரேந்திர மோதி வந்தார்.

பட மூலாதாரம், ANI
நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குடியரசு மாளிகைக்கு வருகை தந்தனர்.