ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா முதன்மை செயல் அதிகாரி ஷெரில் பதவி விலகல்

தமிழ்நாடு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம்.

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய செய்திகள்

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து அதன் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் புதன்கிழமையன்று பதவி விலகியுள்ளார்.
    • இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தார்.
    • ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக்கொள்கையை வரையறை செய்யும் உயர்மட்டக் குழு மற்றும் வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் இருந்து செளதி அரேபியாவிற்கு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்கள் செல்ல மாட்டார்கள் என்று இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாடு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  2. 21 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல்: ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

  3. கச்சத் தீவு விவகாரத்தின் வரலாறு: இலங்கையிடம் இருந்து இதை இந்தியா மீட்க முடியுமா?

  4. கோயம்புத்தூர் காவல்துறை சித்தரவதை: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு - மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

    கோவையில் காவல்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்ட சமூக ஆர்வலருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை அதிகாரிகள் தன்னை சட்டவிரோதமாக துன்புறுத்தியதாக, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்கானிப்பாளர், முதலமைச்சரின் தனிப் பிரிவில் புகார் அளித்தார்.

    அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.

    இதையடுத்து, மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், 'காவல்துறை அதிகாரிகள், விசாரணை என்கிற பெயரில் ராம்குமாரிடம், மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட ராம்குமாருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் குற்றச்சாட்டிற்குள்ளான காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்.' மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

    கோவை ரமேஷ்குமார்
  5. நடிகர்கள் ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: 6 வாரம் நடந்த விசாரணையின் பின்னணி என்ன?

  6. யூ ட்யூப்பர் கார்த்திக்கிற்கு போலீஸ் காவல் மறுப்பு

    கோயில் புனரமைக்க பல லட்சம் ரூபாய் வசூல் செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட யூ ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

    ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், கார்த்திக் கோபிநாத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு கார்த்திக் கோபிநாத்தை காவல்துறையினர் பலத்த பாதுகாப்போடு இன்று ஆஜர்படுத்தினர்.

    மனுவின் மீது விசாரணையில், கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவல் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதையடுத்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது பிணை கோரும் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    யூ ட்பூப்பர் கார்த்திக்
  7. 'பறையா' சொல் பிரயோகம்: கோவையில் அண்ணாமலை மீது புகார்

    பெதிக புகார்

    பறையா என்ற சொல்லை பிரயோகப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதவி ஏற்று 8 ஆண்டுகள் ஆனதையடத்து , தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், ஒரு பதிவு எழுதினார். அது பட்டியல் சாதியினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார்.

    இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கோயும்புத்தூர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    அதில், ஆதிக்க சாதி மனநிலையோடு, கேவலமாக சித்தரிக்கின்ற வகையில் பேசியுள்ள, அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்று கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இலங்கையில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லவில்லை - பொருளாதார நெருக்கடியால் அறிவிப்பு

    இலங்கை ஹஜ் யாத்திரை ரத்து

    பட மூலாதாரம், Reuters

    இலங்கையில் இருந்து செளதி அரேபியாவிற்கு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்கள் செல்ல மாட்டார்கள் என்று இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இலங்கையிலிருந்து 1, 585 பேருக்கு ஹஜ் யாத்திரைக்கு செளதி அரேபியா அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 'தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு இலங்கையிலிருந்து செளதிக்கு ஹஜ் கடமைக்காக யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில்லை.' என, அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம், ஹஜ் பயண முகவர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன.

    இதை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் கடந்த 31ஆம் தேதி, அறிவித்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 'ஹஜ் கடமைக்காக இலங்கைக்கு ஒதுக்கீடுகளை வழங்கியமைக்காக செளதி அதிகாரிகளுக்கு நன்றி. இலங்கையிலிருந்து யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்கு செல்லாமையினால் செளதி அதிகாரிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக.'

    இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும் கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளிலும், இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்கள் செல்லவில்லை.

  9. விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா?

  10. இந்தியா முழுவதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் - போஸ்ட் ஆபீசில் கிடைக்கும்

    கோவில்பட்டி கடலை மிட்டாய்

    கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமானதாக உள்ளது. இதற்கு புவிசார் குறியீடும் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஒரு கிலோ கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சலகங்களில், ரூ 390 ரூபாய் செலுத்தி, அடுத்த ஓரிரு நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

    இது குறித்து அஞ்சல்துறை கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்திருப்பதாவது, 'புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்டது.

    தற்ப்போது, இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் ரூபாய் 390 கொடுத்து கடலை மிட்டாயை ஆர்டர் செய்தால், கோவில்பட்டி தலைமை அஞ்சல் இணையம் மூலம் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில், விரைவு அஞ்சலில் கொண்டு சேர்க்கப்படும். இதற்கான விரைவு அஞ்சலுக்கு தனிக் கட்டணம் கிடையாது.

  11. திருச்சி சிறப்பு முகாமை மூட வேண்டும் - சீமான் பேட்டி

    சீமான்
    படக்குறிப்பு, திருச்சி நீதிமன்ற வளாகத்தில் சீமான்

    தேர்தலில் பாஜக எங்களை போன்று தனித்து போட்டியிடுமா ? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்..

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு மதிமுக - நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 2ல்ஆஜரானார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ' திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த சித்திரவதை சிறையை உடனடியாக மூடுங்கள். இலங்கை தமிழர்களின் அம்மாவை தனியாக, அப்பாவை தனியாக, குழந்தையை தனியாக முகாம்களில் அடைக்கிறார்கள்.

    ஆனால், ஈழத்தமிழர்களுக்கு அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று கூறுவது நாடகமாக இல்லையா?.' என்றார்.

    தொடர்ந்து, 'இந்திய பிரதமர் மோதி பொறுப்பேற்று, 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 8 ஆண்டுகளில் பாஜக சாதித்தது என்று ஒன்றை கூற சொல்லுங்கள்? நீட், க்யூட் என்று எத்தனை தேர்வுகளை கொண்டு வருகிறார்கள்.?

    ஏன், நாட்டை ஆளும் பிரதமர் மோதி மற்றும் அமைச்சர்கள் தேர்வு எழுத கூடாது? ஒவ்வொரு துறைகளியிலும் தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் தான் அரசியல் தலைவர்களாக வர வேண்டும்.

    தேர்தலில் பாஜக எங்களை போன்று தனித்து போட்டியிடுமா ? வளர்கிறோம் என்று கூறும் நீங்கள் தனித்துப் போட்டியிடுங்கள்.' என்றார் சீமான்.

  12. வங்கி மேலாளர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 4 கொலைகள்

  13. தூத்துக்குடியில் காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு, நாற்காலி வீச்சு

    காங்கிரஸ் கூட்டத்தில் மோதல்

    தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தேர்தல் பார்வையாளர் வளசலன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் ஏபிசி. வி. சண்முகம் பேசுகையில், 'காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினால் மட்டும் போதாது. கட்சியை பலப்படுத்தவேண்டும்.' என்றார்.

    அப்போது, மகளிர் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர், முத்துவிஜயா எழுந்து, 'தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நீங்கள் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தீர்கள்?. ஒரே வார்டில் திமுகவும் போட்டியிட்டது. காங்கிரசும் போட்டியிட்டது. இதை ஏன் நீங்கள் பேசி முடிக்கவில்லை? இப்படி இருந்தால் கட்சி எப்படி பலப்படும்?.' என்றார்.

    இதையடுத்து, மாநகராட்சி கவுன்சிலா் சந்திரபோஸ், குறுக்கிட்டு பேச முயன்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. தொடர்ந்து முத்துவிஜயா கூட்டத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

  14. சென்னையில் சொந்த வீடு வாங்க இது சரியான தருணமா?

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு ஆளுநருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு

    தமிழ்நாடு ஆளுநர் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    பட மூலாதாரம், TNDIPR

    படக்குறிப்பு, கோப்பு படம்

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

    தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடனிருந்தனர்.

    நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இந்த சந்திப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பில் பேசப்பட்ட விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

  16. காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு கொரோனா

    சோனியா காந்தி

    பட மூலாதாரம், sonia Gandhi

    படக்குறிப்பு, சோனியா காந்தி

    காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சோன்காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக உள்ள சோனியா காந்திக்கு காய்ச்சல் மற்றும் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜிவாலா இதை தெரிவித்துள்ளார்.

    நேஷ்னல் ஹரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் வரும் 8ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை - அரசாணை வெளியீடு

    தமிழ்நாடு கல்விக் கொள்கை

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக்கொள்கையை வரையறை செய்யும் உயர்மட்டக் குழு மற்றும் வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை நடைமுறைப்படுத்துவது குறித்து நடைபெறும் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தையும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கையை வகுக்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் என 13 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருக்கான வழிகாட்டுதல் மற்றும் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    தி.மு.க. கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

  18. தந்தையை கொன்று பீப்பாயில் உடலை மறைத்த மகன் - நீதிமன்றத்தில் சரண்

  19. திருவள்ளூரில் மது அருந்திய போது தகராறு - லாரி ஏறி இருவர் மரணம்

    மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை லாரி ஏற்றிக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஓட்டுநர், உதவியாளர் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாரி நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36), குமரன் (34) நவீன் (25) ஆகியோர் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளனர்.

    அப்பொழுது உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் லாரியை நிறுத்த சென்றுள்ளனர். லாரி ஓட்டுனர் ஹாரன் அடித்து உள்ளார். லாரியின் முகப்பு வெளிச்சமும் மூவரின் மீதும் பட்டுள்ளது.

    இதனால் லாரி ஓட்டுனரிடம் மூவரும் தகராறு ஈடுபட்டு, கண்ணாடியை அடித்துள்ளனர். அப்போது, லாரி ஓட்டுனர், லாரியை வேகமாக ஓட்டியுள்ளார். லாரி ஏறியதில், கமலகண்ணன், குமரன் இருவரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

    படுகாயமடைந்த நவீன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், உதவியாளர் கிரீஷ்குமார் இருவரையும் செங்குன்றம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உ.பி ஓட்டுநர் கண்ணையா லால்

    பட மூலாதாரம், TN Police

  20. ஹாலிவுட் பிரபலங்கள் ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: பின்னணி என்ன?