இலங்கை பொருளாதார நெருக்கடி - உலக வங்கி 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி

உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. மதுரை சித்திரைத் திருவிழா - ஆய்வாளர்கள் சொல்லும் வியக்கவைக்கும் வரலாற்று தகவல்கள்

  2. இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியது யார்? பொருளாதார நெருக்கடி பற்றி 7 வரைபடங்களில் எளிய விளக்கம்

  3. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.

    • இலங்கையில், 367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசிதழில்(Gazette) வெளியிடப்பட்டுள்ளது.
    • கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், பாஜக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
    • இலங்கை பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் மக்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்தி வரும் போராட்டம்
    • 'பீஸ்ட்' பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் நூறு பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல்
    • யுக்ரேன் மேரியோபோல் நகரில் ரஷ்யப் படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராயப்போவதாக அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ளன.
    • நெல்லையில் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
    • இலங்கைக்கான சீன தூதுவரை, புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில், போராட்டக்காரர்களை கலந்துரையாடல்களுக்கு வருகைத் தருமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் என்ன உற்சாக வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத வரவேற்புடன் யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட்டிருக்கிறது பீஸ்ட் திரைப்படம்.
    • யுக்ரேனில் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல்முறையாக குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், புதினை 'சர்வாதிகாரி' என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  4. இலங்கை யாழ்ப்பாணத்தில் முண்டியடித்து தியேட்டரில் பீஸ்ட் படம்பார்க்க சென்ற ரசிகர்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  5. "நானும் திராவிடன் தான்"- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    அண்ணாமலை

    கோவை கருமத்தம்பட்டியில் தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பல்வேறு விவகாரங்களுக்குப் பதிலளித்து பேசிய அவர், "கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளையில் கட்டாய மதமாற்றம் பேசுபொருளாகி இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டாய மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது. மகாத்மா காந்தியே மதமாற்றம் பெரிய அபாயம் என்று சொல்லி இருக்கிறார்.

    கண்ணாட்டுவிளை விவகாரத்தை தமிழக அரசு மூடி மறைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அதில் பா.ஜ.க தலையிடும்", என குறிப்பிட்டார்.

    மேலும் பேசுகையில், "சட்டமன்றத்தில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.கவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி இருக்கின்றது? பா.ஜ.கவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.

    நிறத்தின் அடிப்படையில் நானும் திராவிடன்தான். திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள் தான்.

    மத்தியில் 450 சீட்டுகளைப் பிடித்து பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும். 2026-ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும். தமிழகத்தைச் சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை ஏற்கலாம். ஆனால் திராவிட இயக்கம் தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது", எனத் தெரிவித்தார்.

  6. யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தில் 50 பேரை கொன்ற ஆயுதம் எது?

  7. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது ஏன்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. மக்களின் சேமிப்பில் விழுந்த வெட்டு

    காய்ந்த

    காய்ந்த மிளகாய் போன்ற எளிய பொருட்கள் - உள்ளூர் உணவு வகைகளை சமைக்க இன்றியமையாதவை, அதன் சில்லறை விலைகள் முந்தைய ஆண்டை விட 190% அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஒரு கிலோ ஆப்பிள் கிட்டத்தட்ட 2021இல் ஏப்ரலில் இருந்த ஒரு கிலோ 55 என்ற விலையை விட இப்போது இரட்டிப்பாகியிருக்கிறது. தேங்காய் எண்ணெய்யை உள்ளூர் மக்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 520 கொடுத்து வாங்கினர். இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ. 820க்கு விற்கப்படுகிறது. இதை குறித்து மேலும் முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

  9. கன்னியாகுமரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதமாற்ற சர்ச்சை

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் பியாட்றிஸ் தங்கம் என்ற ஆசிரியை, தையல் வகுப்புக்கு வரும் மாணவிகளிடம் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று தையல் வகுப்பிற்கு சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் இரணியல் பகுதி காவல்துறையினருக்கு தகவலளித்து, காவல்துறையினருடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.

    காவல்துறை நடத்திய விசாரணையில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்து குற்றச்சாட்டை முன் வைத்தனர்.மேலும் காவல்துறை, தலைமை ஆசிரியர் முன் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து மாவட்ட முதன்மை அலுவலரிடம் தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை பியாட்றிஸ் தங்கத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் உத்தரவிட்டார்.

  10. பீஸ்ட் விமர்சனம்: ரசிகர்கள் சொல்வது என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. ஜனாதிபதியை வெளியேற்ற மக்களால் அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்'

  12. இலங்கைக்கு 76 கோடி ரூபாய் வழங்கிய உலக வங்கி

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

    இலங்கை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண மருந்து வகைகளை தொடர்ந்து விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக உரிய நேரத்தில் கடன் பத்திரங்களை விநியோகிக்க முடியாமையினால், சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.

    இதன்படி, இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சில இது உங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கம் தெரிவித்த நிலையில், தற்போது உலக வங்கி கடன் உதவி செய்துள்ளது.

    இந்திய நிவாரண கடன் வசதியின் கீழ், இந்த கடன் பத்திரத்தை விநியோகித்து மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் ஒரு நடைமுறை என சுகாதாரத்துறை கூறுகின்றது.

    மேலும், மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தவிர்த்து, மருந்து விநியோகத்திற்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சகம் கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளனர்.

    தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு நிதி உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை குடிமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  13. விஜய்யின் பீஸ்ட்: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா?

  14. இலங்கையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடு நீட்டிப்பு

    இலங்கை

    இலங்கையில், 367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசிதழில்(Gazette) வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானதாவது இலங்கை அரசிதழில் ஏப்ரல் 10 அல்லது அதற்குப் பிறகு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மட்டுமே விதிமுறைகள் பொருந்தும் என்று கூறியுள்ளனர்.

    ஆப்பிள், திராட்சை,ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள், தண்ணீர் மதுபானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீது இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் டிஜிட்டல் மற்றும் வீடியோ கேமராக்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  15. இலங்கையை அடுத்து நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடியா?

  16. நிழல் இல்லாத நாள் பற்றி மாணவர்கள் ஆய்வு

    ராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிழல் இல்லாத நாள் நிகழ்வு பற்றி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    விஞ்ஞானி பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் டெக்னாலஜி மையம் மற்றும் மதுரை கலிலியோ அறிவியல் மையம் இணைந்து வழங்கிய பயிற்சி உபகரணங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நிழல்
    படக்குறிப்பு, ஒரு அட்டையின் மீது வெள்ளைத் தாளை கிடத்தி அதன் மையத்தில் ஒரு குச்சியானது நடப்பட்டது. ஆய்வில் சரியாக 11 மணியில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் வெள்ளைத்தாளில் குச்சியின் நிழல் விழும் இடத்தையும் நேரத்தையும் குறித்து கொண்டு வந்தனர். சரியாக பிற்பகல் 12.14 மணிக்கு பொருள்களின் நிழல் தரையில் மீது விழாமல் இருந்ததை கண்டு மாணவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    நிழல் இல்லா நாள் என்றால் என்ன?

    பொதுவாக நாம் குச்சியை செங்குத்தாக நட்டு வைத்தால் சூரிய ஒளியின் நிழல் கொஞ்சமாக குறைந்து நண்பகல் நேரத்தில் குறைந்து நிலத்தில் இருக்கும் நிழலே இல்லாமல் இருக்காது. ஆனால் ஆண்டில் இரண்டு நாட்களில் மட்டும் நண்பகல் நேரத்தில் செங்குத்தான பொருள்களில் நிழல் அதனைச்சுற்றி விழாது. இதனைத்தான் வானவியலின் நிழல் இல்லாத நாள் என கொண்டாடப்படுகிறது.

    இந்த நிழலில்லா நாள் நிகழ்வானது ஆண்டில் இரண்டு முறை ஏற்படுகிறது. இந்தாண்டு ஏப்ரல் 13 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய தேதிகளில், ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிழல் இல்லாத நாள் நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்த நிழல் இல்லாத நாள் கடக ரேகை (Tropic of Cancer) மற்றும் மகர ரேகைக்கும் (capricorn) இடைப்பட்ட பகுதியில் தான் நிகழும் இதற்கு காரணம் பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுவதால் தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

  17. மேஜிக் காளான்களில் உள்ள சைலோசிபின் மன அழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுகிறதா?

    சித்தரிப்புப் படம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    மேஜிக் காளான்களில் காணப்படும் சைலோசிபின் என்கிற ஒருவித மயக்கத்தை தரக்கூடிய ரசாயனம், தீவிர மன அழுத்தத்தில் சிக்கியுள்ளவர்களை அதிலிருந்து விடுவிக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்திலிருந்து வெளியில்வர எடுத்துக்கொள்ளப்படும் வழக்கமான மருந்துகளைவிட இவை அதிக செயலாற்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்

  18. சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில் கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா மீது முதல் தகவல் அறிக்கை

    ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல்

    கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், பாஜக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஈஸ்வரப்பா மீது சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் பாட்டீல் புகார் அளித்துள்ளார்.

    சந்தோஷ் பாட்டீல் இறப்பதற்கு முன் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார், அதில் 'ஈஸ்வரப்பா வேலைக்காக 40 சதவீத கமிஷன் கோரியதாக' குற்றம் சாட்டினார். இவர் செவ்வாய்க்கிழமை உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இறந்து கிடந்தார்.

    இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் சூடுபிடித்துள்ள சூழலில், ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவக்குமார் பேசுகையில், "கே.எஸ். ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தங்கள் மக்களிடமே 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். சந்தோஷ் பாட்டீலிடமும் கமிஷன் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்திடம் பேசுவதாக ஆளுநர் கூறியுள்ளார்" என்று கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. இலங்கை

    இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் (தேசிய நுகர்வோர் விலை குறியீடு) வெறும் 5% ஆக இருந்தது.

    2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், பணவீக்கத்தில் ஆண்டுதோறும் காணப்படும் மாற்றம் கிட்டத்தட்ட 18% ஆக உயர்ந்துள்ளது - இது முந்தைய ஆண்டை விட 13% அதிகமாகும். விநியோகத்திற்கு எதிராக தேவை அதிகமாக இருப்பதால், எஞ்சியிருக்கும் பொருட்களின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் உச்சவரம்பை பாதிக்கிறது.

  20. டேட்டா சோனிஃபிகேஷன் தொழில்நுட்பம் முலம் டிஜிட்டல் பரிமாற்றங்களில் ஒலியை கொண்டு வந்ததற்காக வாழ்த்துக்கள் தெரிவித்து பிரதமர் ட்வீட்

    "நான் யுபிஐ(UPI) மற்றும் ஆன்லைன் பரிமாற்றங்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளேன். ஆனால், டேட்டா சோனிஃபிகேஷன் தொழில்நுட்பம் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒலியைக் கொண்டு, அந்த கருத்தை திறம்பட வெளிப்படுத்தியுள்ள விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்று பிரதமர் நரேந்திர மோதி, 'இந்தியா இன் பிக்சல்கள்'இன் முயற்சியை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு