யுக்ரேன்
மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா?
ரஷ்ய படையெடுப்பு விவகாரத்தில் தற்போது இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே அறியுங்கள்:
ரஷ்யe யுக்ரேனுக்குள் நுழைந்து படையெடுக்கத் தொடங்கியது. முக்கிய நகரங்களில் யுக்ரேனின் ராணுவ
உள்கட்டமைப்பின் மீது ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.
ரஷ்யாவை சேர்ந்த “ஆக்கிரமிப்பாளர்கள்” சுமார் 50 பேரை கொன்றதாக, யுக்ரேன்
ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 6 ரஷ்ய விமானங்களை சுட்டு
வீழ்த்தியதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்தது.
ஆனால், யுக்ரேனின்
இந்த கூற்று சரிபார்க்கப்படவில்லை.
சிறு எதிர்ப்பை மட்டுமே தாங்கள் சந்தித்ததாகவும், யுக்ரேனிய படைகள், தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு திரளாக தப்பி ஓடியதாகவும்
ரஷ்யா தெரிவித்துள்ளது.
முதல்
வெடிகுண்டு தாக்குதல் நடந்தது முதல், தலைநகர் கீஃபில் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது.
யுக்ரேன் தலைநகர் கீஃபில் உள்ள விமான தளத்தை மூடி விட்டது. இதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் அந்த நகரத்தை விட்டு சாலை வழியாக பெருமளவில் வெளியேறி வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி
நிலவுகிறது.
மற்ற
பகுதிகளில் மக்கள் பலரும் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பேருந்துகள்,
பணம் எடுக்கும் மையங்கள், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வரிசையில்
காத்திருக்கின்றனர்.
யுக்ரேன்
எல்லையில் உள்ள போலாந்து, ஸ்லோவாகியா
மற்றும் ஹங்கேரி போன்ற சில ஐரோப்பிய நாடுகள், அடைக்கலம் தேடுபவர்கள் தங்கள் நாடுகளில்
நுழைவதற்கு தயாராகி வருவதாக தெரிவித்தன.
ரஷ்யா
– யுக்ரேன் நெருக்கடி தொடர்பாக, அருகாமை
நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன.
ரஷ்ய
எல்லையில் உள்ள எஸ்தோனியாவின் பால்டிக் குடியரசு பிரதமர் கூறுகையில், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நேட்டோ
நாடுகள், நேட்டோ பிரிவு 4-ன் படி, கலந்தாலோசனை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக
கூறினார்.
மால்டோவாவில்
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், யுக்ரேன் மக்களுக்கு உதவவும் தயாராகி
வருகிறது. லித்வேனியாவின் அதிபர் கிதானஸ் நவ்சேடா, அவசர நிலையை பிரகடனப்படுத்த
கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேட்டோ
அமைப்பின் பொது செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், “ஆக்கிரமிப்பில் இருந்து கூட்டு நாடுகளை
காக்க தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.
அமெரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான் ஆகியவை, ரஷ்யாவின் நடவடிக்கையை ஆதரிக்கும்
அதன் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யுக்ரேனிய ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு நிதி வழங்கும் வங்கிகளுக்கு எதிராக
தடைகளை விதித்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆற்றிய சமீபத்திய தொலைக்காட்சி உரையில்,
“விளாதிமிர் புதினின்
அருவருக்கத்தக்க மற்றும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி தோல்வியில் முடிய
வேண்டும்” என தெரிவித்தார்.