நிறைவடைகிறது இன்றைய நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளில் தேடப்படும் நபரான தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
- தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.
- 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- தமிழகத்தில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக உயர்ந்துள்ளது.
- செஸ் போட்டியில் உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
- அஜித் நடித்து பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஹாஷ்டாகுகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கிள் உள்ளன..





















