நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
யுக்ரேன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படையினரைக் குவித்துள்ளது, பனிப் போர் காலத்துக்கு பின் அதிக அளவில் படைகள் குவிக்கப்படும் செயல் என்றும் மார்க் மில்லி கூறுகிறார்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
ஓசூர் அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற முதியவர் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சித்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கன்னியப்பன். 70 வயதான இவர் நேற்று தனக்கு சொந்தமான 15 ஆடுகளை அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள சின்ன வண்ணாத்தி பாறை என்ற இடத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அவர் மாலையில் வீடு திரும்பாத நிலையில் அவருடைய மனைவி சரோஜா உட்படப் பலரும் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர்.
இன்று காலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குச் சென்று தேடியபோது கண்ணியப்பன்காட்டுயானை தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.
இதனால் பலர் உயிரிழப்பதும் காயமடைவதும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படையினரைக் குவித்துள்ளது, பனிப் போர் காலத்துக்கு பின் அதிக அளவில் படைகள் குவிக்கப்படும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
யுக்ரேன் மீது படையடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
குடியரசு தின விழா மற்றும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்காக டெல்லி விஜய் சவுக் பகுதியில், இருண்ட வானில், ஆயிரம் ட்ரோன்கள் மூலம், இந்திய வரைபடம், உலக வரைபடம் என்று பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அதில் உருவாக்கப்பட்ட இந்திய வரைபடம்.

பட மூலாதாரம், ANI
தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் ஹஸ்ஸன் போரா அமைந்துள்ளது. அங்கு காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்த தலைமை கான்ஸ்டபிள் அலி முகமத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியைச் சுற்றி வளைத்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரங்களில் 24,418 பேர் கோவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். அதேநேரம், மொத்தமாக 27,885 பேர் கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.
கடந்த 24 மணிநேரங்களில் தமிழ்நாட்டில் 46 பேர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இதுவரையிலான மொத்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை, 2,08,350.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மூன்று மாதங்களுக்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று கூறி பணியில் சேரவிடாமல் தடுக்கும் வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிட்டமைக்காக, டெல்லி மகளிர் ஆணையம் பாரத ஸ்டேட் வங்கி மூன்று மாதத்திற்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, "தற்காலிகமாக தகுதியற்றவர்கள்," என்று அழைத்தது குறித்து மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "வங்கியின் நடவடிக்கை பாரபட்சமானது, சட்டவிரோதமானது. ஏனெனில் சட்டப்படி வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளை இது பாதிக்கும். இதைத் திரும்பப் பெறுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்," என்று அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், AIADMK
அதிமுகவின் நலன் பாதிக்கப்படாத வகையில் பா.ஜ.கவுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து அதிமுக – பா.ஜ.கவினரின் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுகவின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு எடுக்கப்படும். பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். அவர்களுக்கு சாதகமான இடங்களை கேட்டுள்ளார்கள். தொடர்ந்து இரண்டு கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்வார்கள்''என்றார்.

பட மூலாதாரம், AIADMK
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்திய குடியரசு தின 73ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ஆம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே பாசறை திரும்புதல் என அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி டெல்லியில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உள்ள விஜய் செளக் சந்திப்பில் இன்று மாலை தொடங்கியது.
முப்படைகளின் இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்ட பிறகு, அவரவர் சார்ந்த படைகளின் இசைக்குழுவினர் வாத்தியங்களை இசைத்தபடி அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினர்.இதில் பல வகையான வாத்தியங்களின் இசை முழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 1,000 ட்ரோன்கள் மூலம் வர்ண ஜாலமும் நடைபெறுகிறது.
முப்படை வீரர்களின் மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், Shweta.tiwari
கடவுள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது கருத்தால், மத உணர்வுகளை புண்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அவரது உள்ளாடைகளைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் அதை "கடவுளுடன்" தொடர்புபடுத்துவதைக் காண முடிந்தது.‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற தனது வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுடன் பேசிய போது அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை அறிந்தேன். "பகவான்" என்பதற்கு "சௌரப் ராஜ் ஜெயின்" என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். நடிகை மன்னிப்பு கேட்ட ஒரு நாளுக்கு பின்னர், போபாலில் ஸ்வேதா திவாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், K.Annamalai
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து அதிமுக – பா.ஜ.கவினரின் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், முனுசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும். பேச்சுவார்த்தை முடிந்த இதற்கு பிறகே முடிவை அறிவிக்க முடியும். அதிமுக பெரிய கட்சி, பா.ஜ.கவும் சில இடங்களில் வலிமையாக உள்ளது. இரு கட்சிகளின் மாவட்ட அளவில் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள்.''என்றார்.
மேலும், ''ஆளுநர் குறித்து திமுக நாளிதழ் முரசொலியில் வெளியிட்டுள்ள கட்டுரை அவதூறு'' என்று அண்ணாமலை தெரிவித்தார்.

பட மூலாதாரம், AIADMK
மத்திய பிரதேசத்தில்இந்தியில் எம்.பி.பி.எஸ் பாட வகுப்புகள் நடத்தப்படும். இதற்கேற்க மருத்துவ பாடங்கள் மொழிபெயர்த்து நடத்தப்படும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் குழு முடிவு செய்துள்ளதாக அந்த மாநில கல்வி அமைச்சர் விஷ்வாஸ் கைலாஷ் சாரங் தெரிவித்துள்ளார்.
இந்தியிலும் எம்பிபிஎஸ் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் தொடர்ந்து கோரிக்கை எழுந்ததாக அவர் கூறுகிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தாய்மொழியில் படித்தால் அதன் முடிவு மிகவும் உகந்ததாக இருக்கும். எனவே பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், இந்தியில் மருத்துவபாடத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்" என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் 61 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், மருத்துவக் கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் பிளஸ் 2 படிக்காமல் பி.யு.சி படித்திருந்தது கலந்தாய்வின்போது தெரியவந்தது. 'மருத்துவப் படிப்புக்கு பி.யு.சி படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பிளஸ் 2 தேர்ச்சிதான் அவசியம்' என்கிறார் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர். இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்...
ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் பிரிவில் ஆஷ் பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ் பார்டியும் 27ஆம் நிலை வீராங்கனையான டேனியல் காலின்ஸ் இருவரும் மோதினர். ஆட்டத்தில் 6-3 7-6(2) என்ற நேர் செட் கணக்கில் ஆஷ் பார்டி வென்றார்.
ஆஷ் பார்டி தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் மற்றும் முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 44 ஆண்டுகளில் சொந்த மண்ணில் பட்டம் வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனையும் ஆகியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றிய தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, திண்டுக்கல் மேற்கு மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றிய தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காஞ்சனா, அன்னப்பூர்ணம், பொன்னுசாமி, பழநிவேல், செந்தில்வடிவு மற்றும் குஜிலியம்பாறை மேற்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்,'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட காந்திதாம்-பூரி விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் 5 ரயில்கள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
நந்தூர்பார் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில், காந்திதாம் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பேண்ட்ரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த இரண்டு பெட்டிகள் எரிந்தன. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினர்.
இதுகுறித்து நந்துர்பார் ரயில் நிலைய மின் பொறியாளர் நீரஜ் நிராலா கூறுகையில், ''காந்திதாம்-பூரி ரயில் தீப்பிடித்து எரிவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலின் மின் இணைப்பை துண்டித்தோம். தீயை அணைக்க பொதுமக்கள் உதவினர்,'' என்றார்.

பட மூலாதாரம், CMOTamilNadu
மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
இந்திய தேசத் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளை (ஜனவரி 30ம் தேதி) முன்னிட்டு, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தியடிகள் சிலைக்கு மாலையணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயரதிகாரிகள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது, ''பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனித மனங்களில் வேற்றுமையை விதைக்கும் தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்துக் கட்டுவோம்!உழைத்துப் பெறாத எதிலும் பெருமைகொள்ள ஒன்றும் இல்லை. ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை அறிவுத்தீயால் எரித்து எல்லோரிடமும் அன்பு செய்வோம்! உறுதி ஏற்போம்.'' என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் தற்போது ஒமிக்ரான் மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.இலங்கையில்,அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரான் தொற்றாளர்கள் என அவர் கூறுகின்றார்.''இலங்கையில் 95 வீதத்திற்கும் அதிகமான அளவு ஒமிக்ரோன் பிறழ்வே பரவி வருகிறது என்று ஆய்வு கூட பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது" என அவர் குறிப்பிடுகின்றார்.
நாட்டில் ஒமிக்ரான் அலை ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் உபுல் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.ஒமிக்ரான் தொற்று தற்போது சமூகமயமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் தரவுகளை விடுவும், ஒமிக்ரான் சமூகத்திற்குள் பரவியுள்ளதாக எண்ண முடிகின்றதென டொக்டர் உபுல் திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.இலங்கையில் கடந்த சில மாதங்களில் பின்னர், கடந்த இரு தினங்களில் 900திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே ஒமிக்ரோன் பிறழ்வு அதிகளவில் பரவி வருவதை அவதானிக்க முடிவதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையில் இதுவரை 6,08,065 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 577,314 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், 15,386 கோவிட் உயிரிழப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் சிகிச்சை நிலையங்களில் 15,365 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.
ஆக்சிஜன் தேவைப்பாடுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சத்துணவு கூடம் ஒன்றில் யானை ஒன்று இறந்து, சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
வால்பாறை அருகே கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக சத்துணவு கூடம் ஒன்று மூடப்பட்டிருந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் சத்துணவு கூடத்தை திறந்தனர்.
அப்போது, இளம் யானை ஒன்று உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிகாரிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
யானையின் எலும்பு எச்சங்களை மீட்டு வனத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்