புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபு மற்றும் கொரோனா மூன்றாவது அலையில் தாக்கம் இருந்து வருவதன் காரணமாக புதுச்சேரி அரசு வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள் பின்வருமாறு, மால்கள், வணிக வளாகங்கள், கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கூடாது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மதுபான கடைகள், பார்கள், உணவகங்கள், விடுதிகள், மற்றும் ஹோட்டல்களில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் மற்றும் கலையரங்கத்தில் 50 சதவீதத்தினருடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முடி திருத்தும், அழகு நிலையம், மசாஜ் நிலையங்களின் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு மற்றும் கோயில் கும்பாபிஷேக விழாக்கள் பக்தர்கள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறை வழிகாட்டுதல் படி செயல்படும்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவு 12வரை அமலில் இருக்கும்.