You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் பத்திரமாக இருக்கிறாரா என அச்சம்; வீடியோ காட்டிய சீனா

பெங் ஷாயின் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று உறுதி செய்ய காணொளி போதாது என பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி - ஜெயலலிதா இரு படங்களும் அகற்றம்

    மதுரை அம்மா உணவக விளம்பரப் பலகை சர்ச்சை விவகாரத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் படமும் அகற்றப்பட்டுள்ளது.

    மதுரை ஜெய்ஹிந்த்திபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையானது.

    ஏற்கனவே இந்த உணவகத்தில் பழைய பணியாளர்களை நீக்கிவிட்டு திமுகவிற்கு சாதகமான பணியாளர்களை நியமிக்கதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த பட சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.

    அதிகாரிகள் இந்த பெயர்ப் பலகையை அகற்றுவதில் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் பெயர் பலகை அகற்றப் பட்டுள்ளது.

    திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு திமுகவினரை கண்டித்தார், அதேபோல தற்போது சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்கள் இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

  2. ஜெய்பீம் பட சர்ச்சை - வருத்தம் தெரிவித்த ஞானவேல்

    ஜெய்பீம் பட சர்ச்சையில் மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  3. சீன டென்னிஸ் வீராங்கனை பத்திரமாக இருக்கிறாரா என்று அச்சம் - காணொளி காட்டும் சீனா

    சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று பலரும் அச்சம் வெளியிட்டுவருகின்றனர்.

    அவர் பாதுகாப்பாக இருப்பதாக காட்டுவதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சீன ஊடகம்.

    ஆனால், அந்தக் காணொளி போதாது என்கிறது பெண்கள் டென்னிஸ் சங்கம்.

    சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் (Peng Shuai) தன் நண்பர்களுடனும், பயிற்றுநருடனும் வெளியே சென்று உணவருந்துவது போன்ற இரு காணொளிகளை வெளியிட்டன.

    அது பெங் ஷாயின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி போதாது என பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறியுள்ளார். “அவரைப் பார்ப்பது நல்ல செய்தி என்றாலும், அவர் எந்தவித நெருக்குதல் மற்றும் அழுத்தங்களின்றி சுதந்திரமாக, தான் நினைப்பதை செய்ய முடிகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என ஸ்டீவ் சிமோன் கூறினார்.

    மேலும் இது குறித்து அமெரிக்காவுக்கான சீன தூதர் க்வின் கேங்குக்கு ஸ்டீவ் கடிதம் ஒன்றையும் எழுதினார். சீனாவை விட்டு வெளியேற பெங் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது பெங் தனியாக (அவருடன் யாருமின்றி) காணொளி அழைப்பு மூலம் தன்னோடு பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

    35 வயதான பெங் ஷாய், சில வாரங்களுக்கு முன் முன்னாள் சீன துணை பிரதமர் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு அவரைக் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை.

  4. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் பிற நாடுகள் தொடர்புடைய பலதுறை செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்கிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.