நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
கொலம்பியாவில் அதி தீவிரமாகத் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரர் மற்றும் அந்நாட்டின் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களைச் செய்யும் குழுவின் தலைவர் டைரோ ஆன்டோனியோ உசுகா சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது பாகிஸ்தான்.
இந்தியா நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் எதையும் இழக்காமலேயே எட்டியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் ஆசமும் முகமது ரிஸ்வானும் இந்திய வீரர்களை பந்துவீச்சை மிக எளிதாக பவுண்டரிக்கு விரட்டினார்கள்.
ஜஸ்ப்ரீஸ் பும்ரா, முகமது ஷமி என முக்கியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முற்றிலுமாக எடுபடவில்லை. மாயாஜால ஸ்பின்னர் என்று அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தியின் பந்துகளையும் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் மிக எளிதாகச் சமாளித்தனர்.
பாபர் ஆசமும் முகமது ரிஸ்வானும் அரைச் சதம் அடித்து வெற்றியை வசமாக்கினர். அவுட்டாவதற்கான எந்தப் பெரிய வாய்ப்பையும் அவர்கள் வழங்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் கே.எல். ராகுல் 3 ரன்களிலும் வெளியேறினர்.
அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியை உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
"இந்தியா முதலில் பந்துவீச வேண்டும் என்று எதிர்பார்த்தோம்" என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸுக்குப் பிறகு கூறினார். இந்தப் போட்டியில் இஷான் கிஷன், அஷ்வின், ஷ்ரதுல் தாக்குர், சாஹர் ஆகியோர் ஆடவில்லை. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி இடம்பெறவில்லை.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய க்ரூப் லெவல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அணிக்கு தசுன் ஷானகாவும் வங்கதேச அணிக்கு முகமதுல்லாவும் கேப்டனாக உள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
சீனா அணுஆயுத திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்த செய்தி ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றக் கூடியது என சிலர் கூறுகிறார்கள்.
இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஸ்ட்ராட்டஜி அண்ட் செக்யூரிட்டி இன்ஸ்டிட்டியூட்டைச் சேர்ந்த ஜோனதன் மார்கஸ் விவரிக்கிறார்.
கோடை காலத்தில் இருமுறை, சீன ராணுவம் விண்ணில் ராக்கெட் ஏவியது, அது தன் இலக்கை தாக்குவதற்கு முன் பூமியை முழுமையாக சுற்றி வந்தது.
முதல் முயற்சியில் ஏவுகணை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இலக்கை தவறவிட்டது என விவரமறிந்தவர்கள் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினர்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் இனி ஸ்மார்ட்வாச் அணிவார்கள்.
வேலை நேரத்தில் அது அவர்களின் நகர்வுகளை முழுமையாக கண்காணிக்கும்.
அதே நேரத்தில் அவர்களின் வருகைப் பதிவை குறிக்கும் கருவியாகவும் செயல்படும் என கூறியுள்ளார்.
அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர். நேற்று (அக்டோபர் 23, சனிக்கிழமை) சர்மத்லா கிராமத்தில், விகாஸ் பேரணியில் மேலே குறிப்பிட்ட கருத்தை கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Reuters
தரைப்படை, விமானப் படை, காவல் துறை இணைந்து நடத்திய கூட்டு ஆபரேஷனில் கொலம்பியாவில் அதிதீவிரமாகத் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரர் மற்றும் அந்நாட்டின் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களைச் செய்யும் குழுவின் தலைவன் டைரோ ஆன்டோனியோ உசுகா சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
டைரோ, வட மேற்கு கொலம்பியாவில் பனாமா நாட்டு எல்லையில் உள்ள ஆன்டியோகுயா மாகாணத்தில் அவரது பதுங்கிடத்தில் இருந்த போது பிடிபட்டார்.
இந்த ஆபரேஷன் தொடர்பான கூடுதல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இந்த மாபெரும் ஆபரேஷனில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.
50 வயதான டைரோவைப் பிடிக்க இதுவரை ஆயிரக் கணக்கான அதிகாரிகளைக் கொண்டு பல ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. ஆனால் இப்போது தான் சிக்கியுள்ளார்.
டைரோவை கொலம்பியாவின் ஆயுதமேந்திய படையினர் சூழ, கையில் விளங்கிட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். இவரைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு எட்டு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுப்பதாக அரசு அறிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவோ இவர் தலைக்கு ஐந்து மில்லியன் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது. டைரோ கைது செய்யப்பட்டது குறித்து கொலம்பியாவின் அதிபர் இவான் டுகேவே தொலைக்காட்சியில் ஒரு காணொளி செய்தியில் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பிபிசி தமிழின் இன்றைய நேரலைப் பக்கத்துக்கு நேயர்களை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கௌதமன் முராரி.