காபூலில் நடந்த இரு தாக்குதல்களில் 10க்கும் அதிகமானோர் பலி - சங்கடம் தரும் படங்கள்

விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    வணக்கம் நேயர்களே.

    இன்றைய நேரலை பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி. இத்துடன் இந்த பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு பிபிசி தமிழ் இணைய தளத்தின் முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஆப்கன் தாக்குதல்: இதுவரை நமக்கு என்ன தெரியும்?

    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், WAKIL KOHSAR/AFP via Getty Images

    படக்குறிப்பு, காபூல் விமான நிலையம் அருகே தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருக்கும் தாலிபன் போராளிகள்

    இந்த நேரலை பக்கத்தில் சற்று முன்பு நீங்கள் இணைந்திருந்தால், ஆப்கன் தாக்குதல் தொடர்பான சமீபத்திய தகவல்களின் சுருக்கத்தை இங்கே பார்க்கவும்.

    • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆகஸ்ட் 26 மாலையில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதல்களால் அந்த நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • இரட்டை தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் பலியானதாக தாலிபன் தரப்பு கூறுகிறது. தாக்குதல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் குவியல்கள் இடம்பெற்ற காணொளிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
    • காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி அருகே முதலாவது தாக்குதலும் அதன் அருகே உள்ள பரோன் விடுதி அருகே இரண்டாவது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில்தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தகுதிபெற்றவர்களை விமான நிலையத்துக்குள் ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியை அமெரிக்க படையினர் மேற்கொண்டுள்ளனர்.
    • காபூல் தாக்குதலில் நான்கு அமெரிக்க மெரைன் கமாண்டோக்கள் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    • காபூல் தாக்குதல்கள் தொடர்பாகவும் ஆப்கானிஸ்தானில் மீட்பு நடவடிக்கைகளை தொடருவது குறித்தும் அமெரிக்க அரசின் உயரதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை அவசரகால நடவடிக்கை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
    • உள்ளூர் மருத்துவமனையில் குறைந்தபட்சம் 60 பேர் படுகாயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் குறைந்தபட்சம் ஆறு பேர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • காபூல் நகர விமான நிலைய பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகள் எச்சரித்த 24 மணி நேரத்துக்குள்ளாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
    • காபூல் விமான நிலையத்தில் பல நாடுகளும் தங்களின் வெளியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
    • இரட்டை தாக்குதல்கள் நடந்தபோதும், ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் மக்களையும் அந்த நாட்டை விட்டு வெளியேற தகுதி பெற்றுள்ள ஆப்கானியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை தொடரும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    • காபூலில் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அதிக மக்களை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தமது நாடு ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
    • ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களால் மக்கள் மீட்பு நடவடிக்கையைத் தொடர முடியாது என்று நார்வே அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவி2 என்ற தொலைக்காட்சியிடம் பேசிய நார்வே வெளியுறவு அமைச்சர் எரிக் சொரைட், காபூல் விமான நிலைய வாயில்கள் தற்போது மூடப்பட்டு விட்டதால் அதனுள் மக்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே அங்கு எஞ்சிய தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் பணி தொடராது என்று அவர் கூறியுள்ளார்.
  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, `அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தாக்குதல்` - தாலிபன் குற்றச்சாட்டு

    காபூலில் தாக்குதல் நடைபெற்ற இடம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் தாக்குதலுக்கு தாங்கள் கண்டனம் தெரிவிப்பதாகவும் தாலிபனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    “காபூல் விமான நிலையத்தில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்லாமிய எமிரேட் கண்டனம் தெரிவிக்கிறது” என அதன் செய்தி தொடர்பாளர் சாபியுல்லா முஜாஹித் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    “மேலும் இந்த குண்டுவெடிப்பு அமெரிக்க பாதுகாப்பு படைகளின் பொறுப்பில் இருந்த இடத்தில் நடைபெற்றுள்ளது” என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    தாலிபனின் மற்றொரு செய்தியாளர், சுஹைல் ஷாஹீன், “தனது மக்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக” டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  4. ஆப்கானிஸ்தானில் மக்கள் மீட்பு நடவடிக்கை தொடரும்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் மக்களையும் அங்கிருந்து வெளியேற தகுதி பெற்றுள்ள ஆப்கானியர்களையும் மீட்கும் நடவடிக்கை தொடரும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    "எங்களுடைய நடவடிக்கை இடைநிறுத்தப்படாது. மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடரும்," என்று காபூல் தாக்குதல்களுக்குப் பிந்தைய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட அவசரகால கூட்டத்துக்கு பிறகு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

    "பயங்கரவாதம் மற்றும் சந்தர்ப்பவாத பயங்கரவாத தாக்குதல்களுக்கு எப்போதுமே சேதாரங்கள் இருக்கும். தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் கண்டிக்கிறோம், அவர்கள் இழிவானவர்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் இதுபோன்ற காட்சிகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டியிருக்கிறதே என நான் பயப்படுகிறேன்," என போரிஸ் ஜான்சன் கூறினார்.

  5. காபூல் தாக்குதல்: ஐ.நா பொதுச்செயலாளர் கண்டனம்

    காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை மாலையில் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்று அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    "இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் உள கள நிலை ஸ்திரமற்று இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஆனால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவசர உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற எங்களுடைய தீர்மானத்தை இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகின்றன," என்று அன்டோனியோ கூட்டரெஷின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீஃபேன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் தாக்குதலில் சில அமெரிக்க படையினர் பலி: பென்டகன்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலைய வாயில் அருகே நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் அமெரிக்க படையினர் சிலர் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கன் மெரைன்ஸ் எனப்படும் கடற்படை அதிரடிப்படை வீரர்களும் வேறு சில வீரர்களும் இறந்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. காபூல் தாக்குதல்: மருத்துவமனைகளுக்கு விரைவுபடுத்தப்படும் காயம் அடைந்தவர்கள், எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம்பெறும் படங்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்.

    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், Photo by Haroon Sabawoon/Anadolu Agency via Getty Images

    படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் வான் பரப்பு

    இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு குவிந்துள்ளதால் தாக்குதல் நடைபெறும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தெரிவித்திருந்தன.

    தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னர், அங்கு `மிக கொடிய` பயங்கரவாத தாக்குதல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரிட்டன் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    முன்னதாக காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாக்குதல் நடைபெறும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள், விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

    விமான நிலையத்திற்கு வெளியே உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து செல்ல வேண்டும் என ஆஸ்திரேலியாவும் தெரிவித்திருந்தது.

    இருப்பினும் ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என எண்ணிய ஆப்கன் மக்கள் பல்வேறு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், Photo by WAKIL KOHSAR/AFP via Getty Images

    படக்குறிப்பு, காபூல் தாக்குதல்களில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் தன்னார்வலர்கள், மருத்துவ ஊழியர்கள்
    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், Photo by WAKIL KOHSAR/AFP via Getty Images

    படக்குறிப்பு, காபூல் தாக்குதலில் காயம் அடைந்தவர்
    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், Photo by WAKIL KOHSAR/AFP via Getty Images

    படக்குறிப்பு, காபூல் தாக்குதலில் காயம் அடைந்தவர்
    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், Photo by WAKIL KOHSAR/AFP via Getty Images

    படக்குறிப்பு, காபூல் தாக்குதலில் இறந்தவர்களின் சடலத்தை டிரக்கில் இருந்து இறக்கிக் கையாளும் தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள்
    ஆப்கானிஸ்தான் தாலிபன்

    பட மூலாதாரம், Photo by WAKIL KOHSAR/AFP via Getty Images

    படக்குறிப்பு, காபூல் தாக்குதலில் காயம் அடைந்த பெண்கள்
  8. ஆப்கானிஸ்தான் வான் பரப்பில் 25 ஆயிரம் அடிக்கு கீழ் பறக்கக் கூடாது: பிரிட்டன் விமான நிறுவனங்களுக்கு பிரிட்டிஷ் அரசு உத்தரவு

    ஆப்கானிஸ்தான் வான் பரப்பில் 25 ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே கட்டாயமாக பறக்கக் கூடாது என்று தமது நாட்டில் இயங்கி வரும் விமான நிறுவனங்களுக்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

  9. காபூல் தாக்குதல்: நேட்டோ செகரட்டரி ஜெனரல் கடும் கண்டனம்

    காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களுக்கு நேட்டோ அமைப்பின் செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் நேசமிக்க உறவுகளுடன் எனது சிந்தனை இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக அங்கு எத்தனை பேரை வெளியேற்ற முடியுமோ அதில் மட்டுமே எங்களுடைய கவனம் இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. காபூல் தாக்குதல்: இதுவரை நமக்கு தெரிந்த தகவல்கள்

    • காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் ஒன்று அப்பி வாயில் பகுதியிலும் மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகள்தான் மேற்கு நாடுகளுக்கு பயணம் செல்லும் அகதிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் காத்திருக்க ஒதுக்கப்பட்ட இடமாகும்.
    • இன்றைய தாக்குதலில் சில அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிந்தைய படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
    • தாக்குதல் நடந்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • காபூல் விமான நிலைய பகுதியில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு தமது குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
    • காபூல் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர். அவசரகால மீட்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தமது நாட்டின் அவசரகால நடவடிக்கைகளை விவாதிக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் தாக்குதலில் 52 பேர் காயம்: தாலிபன் செய்தித்தொடர்பாளர்

    காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 52 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், பலர் பலியாகியிருப்பதாகவும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக ஆப்கன் உள்ளூர் தொலைக்காட்சியான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    சம்பவ பகுதியில் எத்தனை பலியானார்கள் என்ற துல்லியமான தகவல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. காபூல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 13: தாலிபன்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் இறந்திருக்கலாம் என்று தாலிபனை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டிருக்கிறது.

    அங்கு தாக்குதல் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காணொளி ஒன்றை ஆப்கன் உள்ளூர் தொலைக்காட்சியான டோலோநியூஸ் அதன் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

    இந்த காட்சி உங்களுக்கு சங்கடத்தை தரலாம் என எச்சரிக்கிறோம்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. "இஸ்லாமியவாதிகள் ஆளுகைக்கு வந்தால் பயங்கரவாதம் தொடரும்"

    ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாதிகள் கையில் அதிகாரம் வந்தால் அங்கு பயங்கரவாதமும் தொடரும் என்று கூறியிருக்கிறார் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் எம்.பியும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான டாம் துகென்தாட்.

    தாலிபன் ஆளுகையின் விளைவால் ஏற்பட்ட குழப்பத்தின் அடையாளமே இந்த தாக்குதல்கள் என்று அவர் கூறி்யிருக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் தாக்குதல்: காணொளியில் இடம்பெற்ற பிணக்குவியல்கள் - பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கும் பிபிசி செய்தியாளர்

    ஆப்கானிஸ்தான் தாலிபன்
    படக்குறிப்பு, சிக்கந்தர் கெர்மானி, பிபிசி செய்தியாளர் - ஆப்கானிஸ்தான்

    காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என் எச்சரிக்கிறார், அந்நாட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

    அங்கு பலியானவர்களின் சடலங்கள் இடம்பெற்ற காணொளியை பார்க்கும்போது, அதிகாரிகள் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிய வருகிறது.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் தாக்குதலில் சில அமெரிக்கர்கள் மற்றும் பொதுமக்கள் பலி: பென்டகன்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலைய வளாகத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்த தாக்குதலில் சில அமெரிக்கர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்திருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

    அப்பி வாயில் பகுதியில் ஒரு தாக்குதலும், அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள பேரன் விடுதி அருகே மற்றொரு தாக்குதலும் நடந்துள்ளதாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வாஷிங்டனில் தற்போது நடத்தி வரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலைய வாயிலை விட்டு விலகியிருக்க பொதுமக்களுக்கு உத்தரவு

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், EPA/AKHTER GULFAM

    படக்குறிப்பு, காபூல் நகரில் தாக்குதலுக்குப் பிறகு புகை சூழ்ந்துள்ள விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி.

    காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியை விட்டு விலகியிருக்குமாறு அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்புப்படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வாயில் பகுதியின் வெளிப்புற பாதுகாப்பை தாலிபன்களும், உள்புற பாதுகாப்பை அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படையினரும் மேற்காண்டுள்ளனர்.

    இந்த வாயில் பகுதியில்தான் ஆப்கானை விட்டு வெளியேற தகுதி பெற்ற ஆப்கானியர்கள், வெளிநாட்டுப் பயணிகள் காத்திருக்கின்றனர். மற்றவர்கள் வேறு வாயில் பகுதியில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

    முறையான கடவுச்சீட்டு, விசா போன்ற ஆவணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இந்த வாயில் பகுதியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இரண்டு தாக்குதல்கள் நடந்தன: பிபிசி செய்தியாளர்

    காபூல் விமான நிலையத்து்ககு வெளியே நடந்தது இரண்டு தாக்குதல்கள் என்று பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்கள் செய்தியாளர் ஜோனாத்தன் பீல் தெரிவித்துள்ளார்.

    இரண்டு தாக்குதல்களும் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியிலேயே நடந்தது என்றும் அங்குதான் கடந்த சில நாட்களாக ஏராளமான ஆப்கன் அகதிகள் காத்திருந்ததாகவும் ஜோனாத்தன் கூறுகிறார்.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் தாக்குதல்: காயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முயற்சி

    காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தபோது காயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சியான டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    அங்கு இரண்டு தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. ஆனால், அதை பிபிசி இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

    சம்பவம் நடந்தபோது நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலைய வாயில் பகுதிக்கு எதிரே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை வாயில் பகுதியில் இருந்த தாலிபன்கள் உள்ளே செல்லுமாறு வற்புறுத்தி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்ததாகவும் தெரிய வருகிறது.

    இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. ஆப்கன் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் பலி: தாலிபன்

    ஆப்கானிஸ்தான்

    காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று தாலிபன் தெரிவித்துள்ளது.

    சில வெளிநாட்டினர், பெண்கள், குழந்தைகள், தாலிபன் போராளிகள் சிலர் காயம் அடைந்துள்ளதாக தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரிட்டன் ராணுவத்தினருக்கு காயம் இல்லை, அமெரிக்க படையினருக்கு என்ன ஆனது?

    காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படையில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் துருப்புகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    காபூல் ஹமீத் கர்ஸாய் சர்வதேச நிலையத்தின் அப்பே வாயில் பகுதியில் பிரிட்டிஷ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே சமயம், அமெரிக்க பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.