நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலையில் இணைந்திருந்ததற்கு நன்றி.
அமெரிக்க தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் சிறப்புக் கட்டுரைகளை பிபிசி தமிழின் முகப்புப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத போதும் அதிபராவதற்கு தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கையை கடந்து மேலும் பல வாக்குகள் பைடனுக்கு சாதகமாக கிடைத்துள்ளன.
பிபிசி தமிழின் நேரலையில் இணைந்திருந்ததற்கு நன்றி.
அமெரிக்க தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் சிறப்புக் கட்டுரைகளை பிபிசி தமிழின் முகப்புப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இந்தத் தேர்தலின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் புதிய அதிபர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் உரையாடினார் தி ஹிந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான என். ராம். உரையாடல்.

பட மூலாதாரம், Getty Images
உலகின் பல்வேறு நாட்டு ஊடகங்களும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ளது குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
நெதர்லாந்தில் உள்ள அல்கிமீன் தக்ப்லாட் (Algemeen Dagblad) எனும் பிரபல நாளிதழ் பைடனை பழைய செருப்புகளுடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளது. ஆனால், அது அவரை இகழும் வகையில் இல்லை.
"அமெரிக்காவைப் பொறுத்தவரை பைடன் ஒரு ஜோடி பழைய செருப்பை போல: பழக்கப்பட்டது மற்றும் சௌகரியமானது. பைடன் தனது பிரசாரத்தில் உறுதியளித்ததைப் போல, அவர் அதிபரானால் வாய்க்கு வரும் வார்த்தைகள் நிறைந்த அதிபரின் ட்விட்டர் பதிவுகளுடன் அமெரிக்கர்கள் கண்விழிக்க வேண்டியதில்லை," என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.
டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை விமர்சித்து அவர் அவ்வாறு ஒருமுறை கூறியிருந்தார். அதையே இந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே பெரும்பாலான கவனம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
மொத்தமுள்ள 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
இவற்றில் 23 குடியரசு கட்சியின் வசமும், 12 ஜனநாயக கட்சியின் வசமும் இருந்தன.
ஜனநாயக கட்சி கூடுதலாக ஓர் இடத்தை பெற்றுள்ளது. நடப்பு செனட்டில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இரண்டும் முறையே 53 மற்றும் 47 இடங்களைப் பெற்றுள்ளன.
ஜோர்ஜா மாகாணத்தில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளுக்கும் மேல் பெறவில்லை என்பதால், அந்த மாகாணத்தில் உள்ள இரு செனட் சபை இடங்களுக்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்ய ஜனவரி 5 அன்று இன்னொரு வாக்குப்பதிவு நடக்கும்.
அதில் அதிக வாக்குகள் பெறும் முதல் இரு வேட்பாளர்களும் செனட் செல்வார்கள்.
இந்த இரு இடங்களிலும் ஜனநாயக கட்சி வென்றால் இரு கட்சிகளும் தலா 50 என்று சமநிலை அடையும்.
அமெரிக்க மாகாணங்கள் ஒவ்வொன்றையும் இரு உறுப்பினர்கள் செனட் சபையில் பிரதிநிதித்துவம் செய்வார்கள்.
435 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
தந்தையிடம் விவாகரத்து பெற்ற தாய், இந்து - யூத மத வழக்கங்களின்படி திருமணம் செய்துகொண்ட கணவர், அவரின் முதல் திருமணம் மூலம் பிறந்த மகள்கள். கமலாவின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் குடும்பத்தின் பின்னணி.

பட மூலாதாரம், Getty Images
குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் இன்னும் தாம் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொள்ளவில்லை.
2008இல் பராக் ஒபாமா வென்றபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் ஜான் மெக்கைன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆற்றிய உரை பலராலும் பாராட்டப்பட்டது.
ஒபாமாவின் முயற்சியையும், ஆப்ரிக்க - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அதிபராவதால் அந்த மக்களுக்கு உண்டாகியிருக்கும் மகிச்சியையும் அந்த உரையில் குறிப்பிட்ட அவர், கறுப்பின மக்கள் வரலாற்றில் அன்பவித்த கொடுமைகள் இன்றும் மனதைக் காயப்படுத்தும் வலிமை உடையவை என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தக் காலத்தில், அவர் (அதிபராக) நம்மை வழிநடத்த என வலிமைகள் அனைத்தையும் கொண்டு உதவுவேன் என்று ஒபாமாவுக்கு நான் உறுதியளித்துள்ளேன் என்று மெக்கைன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பைடனின் ஆதரவாளர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டு வெற்றிகொண்ட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கூட்டம் கூடுவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பைடனின் தேர்தல் பிரசாரத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.)
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த சில நாட்களாகவே தேர்தலில் மோசடி நடந்தது என்றும் அதற்காக தங்கள் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லும் என்றும் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது.
இப்போது ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டி அவரது மனைவி, ஜில் பைடன்.

பட மூலாதாரம், EPA
உள்ளூர் செய்தித் தாள்கள் தங்கள் வாசகர்களுக்கு ஏற்ப செய்திகளை வெளியிட வேண்டியது அவசியம்தான்.
ஸ்காட்லாந்தில் உள்ள ஆய்ர்ஷையர் டெய்லி நியூஸ், தனது செய்தி இணையதளத்தில் 'சௌத் ஆய்ர்ஷையர் கோல்ஃப் க்ளப் உரிமையாளர் 2020 அதிபர் தேர்தலில் தோற்றார்' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏன் தெரியுமா? அங்குள்ள டிரம்ப் டர்ன்பெரி கோல்ஃப் கோர்ஸ் அதிபர் டிரம்புக்கு சொந்தமானது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு அந்நாட்டின் அதிபராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவரது தாய்வழி மாமாவும் இந்திய தலைநகர் டெல்லியில் வசிப்பவருமான கோ. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸின் சமீபத்திய தேர்தல் வெற்றி குறித்து பிபிசி தமிழுக்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு பேட்டியளித்தார். அதில் இருந்து சில பகுதிகள்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடனுக்கு உலகெங்கும் உள்ள நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும், இன்னும் சில நாடுகளின் தலைவர்கள் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. சீன அதிபர் ஷி ஜின்பிங், வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், துருக்கி அதிபர் ரிசெப் தய்யீப் எர்துவான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
வலதுசாரி அரசியல் தலைவர்களான பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹங்கேரி அதிபர் விக்டர் ஓர்பன் ஆகியோரும் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
சௌதி அரேபிய அரச குடும்பத்தில் இருந்தும் யாரும் இன்னும் பைடனுக்கு வாழ்த்து கூறவில்லை.
1800இல் அதிபர் பொறுப்பேற்ற ஜான் ஆடம்ஸ் அவரது மனைவி அபிகைல் ஆடம்ஸ் உடன் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது இந்தக் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.
வெள்ளை மாளிகை பராமரிப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தனி நிதி ஒதுக்குகிறது. இங்கு 132 அறைகள் மற்றும் 35 குளியல் அறைகள் உள்ளன.
மெலானியா டிரம்ப் ஃபேஷன் துறையில் இருந்தவர் என்பதால், அங்கு பல மாற்றங்களைச் செய்துள்ளார்.
அதிக பொருட் செலவில் அங்கு நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும் அவரே பொறுப்பாக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்னும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மாகாணங்களின் முடிவுகள், அதிபர் தேர்தல் வெற்றியாளரை மாற்றாது.
வடக்கு கரோலினா - இந்த மாகாணத்தில் 98% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இங்கு டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். 2016ஆம் ஆண்டும் இங்கு டிரம்ப் வென்றிருந்தார்.
அரிசோனா - 97% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள இந்த மாகாணத்தில் பைடன் முன்னிலை வகிக்கிறார்.
ஜோர்ஜா - 99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள இந்த மாகாணத்தில், பைடன் 49.% மற்றும் டிரம்ப் 49.3% வாக்குகளை இதுவரை பெற்றுள்ளனர்.
அலாஸ்கா - 2016இல் இங்கு வென்ற டிரம்ப் இந்த ஆண்டும் இங்கு முன்னிலை வகிக்கிறார்.
President-elect (ப்ரெசிடெண்ட் எலெக்ட்) - புதிய அதிபர் பதவி ஏற்கும் வரை அவர் president-elect என்று அழைக்கப்படுவார்.
Cabinet (கேபினெட்) - அமெரிக்காவின் அனைத்து துறைகள் மற்றும் அரசின் அமைப்புகளுக்கு தலைமை தாங்குவோரின் குழுவில் உள்ளவர்கள் கேபினட் என்று அழைக்கப்படுவார்கள். கேபினெட் என்பது 'அமைச்சரவை' என்று பொருள்பட்டாலும் பெரும்பாலும் இக்குழுவில் உள்ளவர்கள் 'செயலாளர்' என்றே அழைக்கப்படுவர். இதில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து பைடன் விரைவில் அறிவிப்பார்.
Confirmation Hearing - அமெரிக்க அதிபர் தனது அமைச்சரவை பதவிகளுக்கு முன்மொழியும் நபர்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர்கள் செனட் குழுக்களால் நேர்காணல் செய்யப்படுவார்கள். அதன் பின்பு அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்களா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பும் நடக்கும். இது அங்கு 'கண்ஃபர்மேஷன் ஹியரிங்' எனப்படுகிறது.
Celtic - அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பான சீக்ரெட் சர்வீஸ் அதிபர் பொறுப்பேற்க உள்ள பைடனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும். தங்கள் எந்த குறியீட்டு பெயர்களில் அழைக்கப்பட வேண்டும் என்பதை அந்த பாதுகாப்பு பெறும் நபரே முடிவு செய்யலாம்.
Celtic (செல்டிக்) எனும் பெயரை ஜோ பைடன் தேர்ந்தெடுத்துள்ளார். Moghul எனும் பெயரை தேர்ந்தெடுத்திருந்தார் டிரம்ப். கமலா ஹாரிஸ் Pioneer என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகல் முதல் அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் தொடங்குகிறது என்று அமெரிக்க அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
அந்தத் தேதியில் தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எனவே ஜனவரி 20-ஆம் தேதி பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்கும் நடைமுறையில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு.
அமெரிக்க அதிபராக பதவியில் இருப்பவர் தனது பதவிக் காலத்தின்போது உயிரிழந்துவிட்டால் அலல்து பதவியிலிருந்து விலகி விட்டால் துணை அதிபராக இருப்பவர் எவ்வளவு சீக்கிரமாக முடியுமா அவ்வளவு சீக்கிரத்தில் அதிபராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.
ஜோ பைடன் அதிபராக வென்றுள்ள செய்தி வெளியானதும் அவரது ஆதரவாளர்கள், வெள்ளை மாளிகை அருகே உள்ள 'ப்ளேக் லைவ்ஸ் மேட்டர் ப்லாசா' அருகே இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் கூடினார்கள்.
வெள்ளை மாளிகை தடுப்புகள் அருகே பெரும் எண்ணிக்கையில் அவர்களைக் காண முடிந்தது.
வாஷிங்கடனில் பதிவான வாக்குகளில் 93% இந்த முறை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகவே பதிவாகி இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அரசில் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ், கருப்பின - தமிழ் பூர்வீகம் உள்ளவர்.
குறிப்பாக இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியான பல மணி நேரங்களுக்கு பிறகு, டிரம்ப் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக பதாகைகள், கொடிகள் உள்ளிட்டவற்றுடன் தெருக்களில் கூடியுள்ளனர்.
டிரம்ப் கூறியதைப் போலவே அவர்களும் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தெருக்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடன் ஆதரவாளர்களுக்கு எதிராக இவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters