அதிபர் தேர்தல்
முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், இரு வேட்பாளர்களுக்கான பிரசார
குழுவும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான போதுமான முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருக்கட்சிகளும் நெருக்கமான போட்டியில் இருக்கும்
மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
“ஜனநாயகக் கட்சியை
சேர்ந்தவர்கள் தாமதமான வாக்குகளை எண்ணுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஏன்? அவர்களுக்கு
தெரியும், அனைத்து சட்டப்பூர்வ வாக்குகளையும் எண்ணி முடித்தால் நாம் வெற்றி பெறுவோம்,”
என டிரம்பின் தேர்தல் பிரசார மேலாளர் பில் ஸ்டீஃபியன் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் பிரசாரக்
குழு சொல்லும் தகவல்களின்படி டிரம்ப் அரிசோனாவில் 30,000 வாக்குகள் வித்தியாசத்திலும்,
பென்சில்வேனியாவில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நவாடாவில் 55 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்திலும் வெற்றி பெறுவார் என ஸ்டீஃபியன் தெரிவித்துள்ளார்.
“எங்களின் வழியில்
நாங்கள் உறுதியாக இருக்கிறேம்.” எனஅவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல பைடனின்
குழுவும் தங்கள் கணிப்பை தெரிவித்துள்ளனர்.
பைடனின் பிரசார
மேலாளர் ஜென் ஓ மேலி, பைடன் நிச்சயம் வெள்ளை மாளிக்கு செல்வார் என தெரிவித்துள்ளார்.
“2016ஆம் ஆண்டு
டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதைக் காட்டிலும் அதிக வாக்கு எண்ணிக்கையில் நாங்கள் வெற்றி
பெறவிருக்கிறோம். அதே போல விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா மாகாணத்திலும் டிரம்ப்
2016ஆம் ஆண்டு வெற்றி பெற்றதைக் காட்டிலும் அதிகம் வெற்றி பெறுவோம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இரு குழுவும் இந்த
கணிப்புகளுக்கு எப்படி வந்தனர் என்பது தெரியவில்லை இந்த எண்ணிக்கையை பிபிசியால் உறுதிப்படுத்த
முடியவில்லை.