உலகம் முதல் உள்ளூர் வரை இன்று
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,000 லட்சத்தை கடந்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ்.
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கனடா நாட்டு மக்கள் அனைவரும் மார்ச் மாதம் முழுவதும் ‘பேனிக்பையிங்’ எனப்படும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொருட்களை வாங்கிகுவிக்கும் செயலிலும் தொலைக்காட்சியிலும் அதிக நேரத்தை செலவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ தரவுகள்தெரிவிக்கின்றன.
அங்கு கழிவறைகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதங்களின் விற்பனை 2019 ஆண்டின் சராசரியைக் காட்டிலும் 241 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஹாண்ட் சானிடைசர்களின் விற்பனை 639 சதவீதமும், காய்கறிகளின் விற்பனை 38 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற உலகக் கோப்பைஇறுதிப்போட்டியில் தான் அணிந்திருந்த ஜெர்சியைஏலம் விட்டு 80,000 அமெரிக்க டாலர்கள் வரை நிதி திரட்டியுள்ளார்.
அந்த ஜெர்சியில்உலகக் கோப்பை போட்டியில்பங்குகொண்ட இங்கிலாந்துஅணியைச்சேர்ந்தவர்கள் அனைவரும் கையெழுத்திடுவர்.
ஏலத்தில் கிடைத்த தொகையை, இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவமனைகளான ராயல்பிராம்ப்டன்மற்றும் ஹேர்ஃபீல்ட் மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளார்.
இந்தியாவின் மும்பை நகரில் மக்கள்வெளியேவரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்துகொண்டு வரவேண்டும் எனஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை வாகனங்கள்ஓட்டிசெல்பவர்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், மற்றும் திருமணம்போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கும்பொருந்தும்.
இந்த முககவசம் வீட்டில் தயார் செய்யப்பட்டதாகவோ அல்லது மருந்தகங்களில் வாங்கியதாகவோ இருக்கலாம்.
இவ்வாறு மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும்அவர்கள்கைதுசெய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான தாராவியில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அம்மாநிலத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர்நகரங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 117 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 72 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்காக தொடர்ந்து அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன.
நேற்று (ஏப்ரல் 7) 743ஆக இருந்த உயிரிழப்புகள் இன்று 757ஆகஉயர்ந்துள்ளது. இது ஏப்ரல் 2ஆம்தேதியன்று ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் குறைவாகும்.
இருந்த போதிலும் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி சரியாக இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என்பதையே இதுகாட்டுகிறது.
பிற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் ஸ்பெயினில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 773 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் மொத்தம் 149 பேர் உயிரிழந்துள்ளனர்
அதில் நேற்று மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சகத்தின் துணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்
மேலும் இந்தியாவில் ஹைட்ரோக்ஸிகுளோரோகுவின் மருந்துக்கு இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி எந்த தட்டுப்பாடும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் இன்று குணமான 74 வயது பெண்ணும் அடங்குவார்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1480 பேரை கண்டறிந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தற்போது இரண்டாம் கட்டத்தில் இருக்கும் தமிழகம், மூன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதுவரை தமிழகத்தில் சுமார் 6000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது மருத்துவ ரீதியாக நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் அவருக்கு உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் நல்ல மனநிலையில் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டவை ஆகும்.
ஆனால், இந்த இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என புதிய தரவுகள் கூறுகின்றன.
2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 6 சதவீதம் சுருங்கிவிட்டதாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
1945ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு மோசமான சூழலை பிரான்ஸ் சந்திக்கிறது.
ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே சுமார் 10 சதவீதம் குறையும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வெனிசுவேலாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளிலேயே தனிமைப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் நிக்கோலோ மடூரா தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், தங்கள் நாட்டில் போதுமான படுக்கைகள் இருப்பதாகவும், வெனிசுவேலாவில் இந்த நோய் தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பல வருடங்களாக வெனிசுவேலாவில் மருந்து மற்றும் உணவு தட்டுப்பாடு இருந்து வருகிறது.
மேலும், அந்நாட்டின் சுகாதார ஊழியர்கள், தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்க மணிக்கணக்காக வரிசையில் நிற்பதால் அவர்களின் பணி பாதிக்கப்படுவதாக ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஆப்ரிக்க பிராந்தியத்தின் இயக்குநரான மட்ஷிடிசோமொயேடி இந்த கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும், பொருளாதாரம் மற்றும் சமூக அளவில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது எத்தியோப்பியா.
102 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட அந்தநாட்டில் இதுவரை 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் இயங்குவது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு அதனை இரவில் திரும்பப் பெற்றது. இதற்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடர்பாக மார்ச் 23ஆம் தேதியன்று மாநில அரசு விரிவான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் எந்தெந்த அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தன.
தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, ரசாயனத் தொழிற்சாலைகள் உட்பட தொடர்ச்சியாக இயங்க வேண்டிய தொழிற்சாலைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் அடிப்படையில்அணுகக்கூடாது எனஉலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மதக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியது குறித்து உலக சுகாதார அமைப்பு (அவசரக்காலதிட்டங்கள்) இயக்குநர் மைக் ரயானிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்த அவர், “கோவிட் 19 வைரஸ் யாருடைய தவறும் இல்லை. ஒவ்வொரு நோயாளியும் பாதிக்கப்பட்டவராகவே அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மத, இன அடிப்படையில் பிரிக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் இல்லை,” என்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மதத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கொரோனா ஜிகாத் போனற பதங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.
தப்லிக் ஜமாத் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் வேண்டுமென்றே போலீஸ் மீது எச்சில் துப்புவது போன்ற போலி காணொளிகளும் பகிரப்பட்டுள்ளன.
மேலும் மைக் ரயான்,“மத வழிப்பாட்டு காரணங்கள்அல்லது வேறு காரணங்களாக இருந்தாலும் மக்கள் அதிகம் கூடுவது ஆபத்தானது. உலக சுகாதார நிறுவனம் இது குறித்த வழிகாட்டல்களை வழங்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலையீட்டுக்குப்பின் பலகூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
இஸ்லாமிய, கிறிஸ்தவ உள்ளிட்ட பல மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்,” என்றுகூறினார்.
ஜெர்மனியில் புதிதாக 4,003 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இருப்பினும் இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அங்கு குறைவாகவே உள்ளது.
அந்நாட்டில் இதுவரை 1861 பேர்கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனி முன்கூட்டியே கொரோனா பரிசோதனைகளைச் செய்ய தொடங்கியதால்தான் அந்நாட்டில் குறைவான நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனப் பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரம் ஒன்றிற்கு அந்நாடு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம்பரிசோதனைகளை மேற்கொண்டது. இது மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகமாகும்.
ஆனால், ஜெர்மனியில் பாதிக்கப்பட்ட பலர் குறைந்த வயதினர் என்றும் கூறப்படுகிறது.
தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வட கொரியா கூறி வருகிறது.
ஆனால் அங்கு 709 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனைகள் நடந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் 698 பேர் உள்நாட்டவர்கள் என்றும் வடகொரியாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி எட்வின் சால்வடோர் தெரிவித்துள்ளார்.
2.5 கோடி மக்கள் தொகையுள்ள அந்த நாட்டில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 14 மாத குழந்தை உடலின் சில உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு நாட்கள் உயிர்காக்கும் இயந்திரத்துடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் உடல் உறுப்புகள் செயலிழந்து குழந்தை உயிரிழந்துவிட்டது என பி.டி.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் 24 வயதாகும் தந்தை மற்றும் 21 வயதாகும் தாய் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.
சமீபத்தில் இவர்கள் பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, குழந்தையின் பெற்றோர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் சேர்த்து ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காணொளிக் காட்சி மூலம் கோவிட்-19 நிலை குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தங்கள் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றே இல்லை என கூறி வந்தாலும், கடந்த சில வாரங்களாக வடகொரியாவில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்கள் எப்படி தங்களை கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என புதிய அறிவுரைகளை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
இதன்படி, மருத்துவரின் பரிந்துரைகள் இன்றி மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் மது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் என்பதால் அதனை அருந்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க, பாரம்பரிய மருந்துகளான பூண்டு, வெங்காயம் மற்றும் தேனை எடுத்துக் கொள்ளுமாறும் அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உண்டானால் மேற்கண்டவை குணப்படுத்தும் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எப்போதும் முகக்கவசம் அணியும்படியும், அதனை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும்படியும் கூறியுள்ளது வடகொரிய அரசு.
கோவிட்-19 தொற்றுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எதுவும் இன்னும் உருவாக்கப்படவில்லை. அவை இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும் பாதுகாப்பாக இருப்பதும் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதில் மிகவும் ஆபத்தானது முதல் ஆபத்தில்லாதது வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. 690 மற்றும் 576 எனும் எண்ணிக்கையுடன் தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன.