கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை - சர்வதேச அளவில் நடப்பது என்ன?

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரப்படி, இதுவரை இத்தாலியில் 59,138 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 5,476 பேர் இறந்துள்ளனர். 7,024 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு அதிகம் பேரை பலி கொடுத்த நாடாக இத்தாலி இருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பயங்கர பேரழிவு

    மகாதீர்

    பட மூலாதாரம், Getty Images

    நாம் அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் கவலை தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் போன்ற ஒன்றை இதுவரைக் கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "தற்போது மலேசியாவில் நடக்கக் கூடிய அனைத்தும் உலகின் இதர பகுதிகளிலும் நடக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது உற்பத்தி குறைக்கப்படலாம். ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப் படக்கூடும்.

    "உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். இதனால் பணக்கார நாடுகள் கூட சிரமங்களைச் சந்திக்கும். சிறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டமானது கடுமையாக இருக்கும். அன்றாடம் சம்பாதிக்கக் கூடியவர்கள் சிரமப்படுவார்கள். இவர்களால் சம்பாதிக்க முடியும் என்றாலும் தேவையை ஈடுகட்டும் வகையில் வருமானம் இருக்காது. எனவே அரசாங்கம் பொருளாதார ரீதியில் உதவ வேண்டியிருக்கும்.

    "மலேசியாவை பொருத்தவரை சுற்றுலாத்துறை தான் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய துறையாகும். இப்போது சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அதை சார்ந்துள்ளவர்கள் வேலையை, வருமானத்தை இழக்க நேரிடும். அரசாங்கத்துக்கும் வருமான இழப்பு ஏற்படும். "மொத்தத்தில் நாம் பயங்கரமான பேரழிவை எதிர்கொண்டுள்ளோம் என்பதே உண்மை," என்று அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

  2. கொரோனா அண்மைய தகவல்கள்

    Corona virus

    பட மூலாதாரம், Getty Images

    • இதுவரை உலகளவில் இந்தகொரோனாதொற்றுக்கு மூன்று லட்சத்து49ஆயிரத்து211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.15,000பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேர்கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.
    • இந்தகொரோனாதொற்றுக்கு இதுவரை அதிகளவில் இத்தாலியில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு மட்டும்5,476பேர் இந்த தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
    • இந்த எண்ணிக்கைசீனாவைகாட்டிலும் அதிகமாகும். சீனாவின்ஹூபேமாகணத்தில்இதுவரை3153பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இத்தாலி,சீனாவை அடுத்து ஸ்பெயினில் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர்.
    • ஸ்பெயினில்கொரோனாதொற்று உயிரிழப்பு2000ஐ கடந்துள்ளது.
    • அதற்கு இடத்தில் இரான் உள்ளது அங்கு இதுவரை1812பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பிரிட்டனில் இதுவரை281பேர் இந்தகொரோனாதொற்றுக்குபலியாகியுள்ளனர். அங்கு இதுவரை5683பேருக்குகொரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்த வருடம் டோக்கியோவில் ஜூலை24ஆம் தேதி நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள்நடைபெறுமாஎன பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
    • ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தங்கள் நாட்டு வீரர்களைஅனுப்பப்போவதில்லைஎனத்தெரிவித்துள்ளது.
    • முதன்முறையாக ஜப்பான் பிரதமர்ஷின்சோஅபேமுதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள்தள்ளிபோகலாம்எனதெரிவித்துள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிகள் சில மாதங்கள்தள்ளிப்போகலாம் அல்லது ஒருவருடத்திற்குத்தள்ளி வைக்கப்படலாம் ஆனால்விளையாட்டை ரத்து செய்யப்போவதில்லைஎனசர்வதேச ஒலிம்பிக்கமிட்டிதெரிவித்துள்ளது.
    • தற்போது இருக்கும் இந்தகொரோனாதொற்று பரவல் சூழலால் உலக பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய சில வருடங்கள் ஆகலாம்எனபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
  3. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல் Coronavirus News

    மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

    உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?

    ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

    இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

    விரிவாகப் படிக்க:

    Corona

    பட மூலாதாரம், Getty Images

  4. கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?

    உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 171 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 3,39,259 பேருக்குப் பரவியுள்ளது. 14,705 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 98,834 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 425-ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

    கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

    கொரோனா
  5. கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer

    கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.

    இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.

    இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

    விரிவாகப் படிக்க:

    கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி?

    பட மூலாதாரம், Getty Images

  6. 30 கோடி இந்தியர்களுக்கு கொரோனா? ஒரு மருத்துவரின் எச்சரிக்கை | Doctor Laxminarayan Interview

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.

    மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.

    இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? - இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  7. லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிலைமை

    மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் இப்போது மரண விகிதம் குறைவாக உள்ளது. அதாவது கொரோனா தொற்று இந்த நாடுகளில் தொடக்க நிலையில் உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மற்றும் ஈக்வேடார் ஆகிய நாடுகளில்தான் இறப்பு விகிதம் அதிகம் உள்ளது. பிரேசிலில் 25 பேரும், ஈக்வேடாரில் 14 பேரும் பலியாகி உள்ளனர்.

    லத்தீன் அமெரிக்க நாடுகள்

    பட மூலாதாரம், Getty Images

  8. கொரோனா வைரஸை Pandemic என்று குறிப்பிட காரணம் என்ன? - விரிவான விளக்கம்

    உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.

    இந்த தொற்று என்னும் பதத்தை தற்போது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலேயே பயன்படுத்துகிறது.

    விரிவாகப் படிக்க:

    Pandemic

    பட மூலாதாரம், Getty Images

  9. கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?

    சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மார்ச் 22 நிலவரப்படி 171 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்குப் பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக மார்ச் 22 வரை சுமார் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா என்றால் என்ன? அது எவ்வாறு பரவுகிறது என்பதை பார்ப்போம்.

    விரிவாகப் படிக்க:

    கொரோனா
  10. கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? - அதிர்ச்சி தரும் தகவல்கள்

    என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி' என்று கூறி அலட்சியம் காட்டிய அதிபர் டிரம்ப் தலைமையிலான வல்லாதிக்க நாடு இப்போது அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு அளிக்க முடியாமல் திணறி வருவதைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது.

    வெளியிலிருந்து பார்த்தால் இந்த நாடு பலருக்கும் ஒரு முழுமையான நாடாகத் தோன்றும். தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிட்டு, வாழ்வை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு, ஆபத்தான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், ஒரு சில நாட்களுக்குள் இந்த நாடு முற்றிலும் மாறிவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் 230க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 18,500க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இது இன்னும் எவ்வளவு மோசமாகப் போகும், எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

    விரிவாக தெரிந்து கொள்ள:

    கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? - அதிர்ச்சி தரும் தகவல்கள்

    பட மூலாதாரம், Getty