"மூன்று ஆண்டுகளில் 81 ஆணவக் கொலைகள்"
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்காக 81 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்றும், இந்தக் கொலைகளுக்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறார் மதுரையிலிருந்து செயல்படும் எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.