காந்தி: அபூர்வ புகைப்படங்களில்

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் காந்தியின் கடைசி 10 வருடங்களில் எடுக்கப்பட்ட சில அபூர்வ புகைப்படங்கள் அடங்கிய புதிய புத்தகம் வெளிவந்திருக்கிறது. (புகைப்படத் தொகுப்பு- படங்கள் கானு காந்தி)

புகைப்படங்கள்: கானு காந்தி- காப்புரிமை கீதா மேத்தா, அபா மற்றும் கானு காந்தியின் வாரிசு
படக்குறிப்பு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1938ம் ஆண்டில், சேவாகிராமத்தில் தனது அலுவலகத்தில் இருந்து , சற்று கவலை தோய்ந்த முகத்துடன் காந்தி . தொலைபேசியில் பேசும் காட்சி. காந்தி இந்த சேவாகோன் என்ற கிராமத்துக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் குடிபெயர்ந்தார். அந்த கிராமத்துக்கு அவர் சேவாகிராம் என்று பெயரிட்டார். சேவை செய்யும் கிராமம் என்று அதற்குப் பொருள்
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, மகாத்மா காந்தியின் கொள்ளு மருமகன் , கானு காந்தி. அவரும் சேவா கிராமத்தில் காந்தியுடன் வசித்தார். 20 வயதுக்கு மேற்பட்ட வயதில் இருந்த கானு காந்தி ஒரு ரொலெய்ஃப்ளக்ஸ் கேமராவுடன் , காந்தியைப் பல சந்தர்ப்பங்களில் படமெடுத்தார்.
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, காந்தி 1948ல் படுகொலை செய்யப்படும் வரை, பல ஆண்டுகள், கானு காந்தி, அவரை சுமார் 2,000 படங்களாவது எடுத்திருப்பார். பல தசாப்தங்களாக அவரது படங்கள் யாருக்கும் காணக்கிடைக்காமலே இருந்தன. ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்தான் இந்தப் படங்களை தொகுத்து விற்பனை செய்தார்.
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, இப்போது அந்தப் படங்களில் 92 படங்கள் புத்தகவடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்புகைப்படத்தொகுதியை, டெல்லியில் உள்ள அறக்கட்டளையான , நாஸர் ஃபவுண்டேஷன் வெளியிட்டிருக்கிறது. ப்ரசாந்த் பஞ்சியார் மற்றும் தினேஷ் கன்னா ஆகிய பிரபல புகைப்படக்காரர்கள் இந்த அறக்கட்டளையை நிறுவியவர்கள்.
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, காந்தியுடன் நோபல் பரிசு வென்ற இந்தியக் கவிஞர் ரபீந்திர நாத் தாகூர். மேற்கு வங்கத்தில் சாந்திநிகேதனில் 1940 பிப்ரவரியில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் இந்த இருவரும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் காட்சியைக் காட்டுகிறது.
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, வங்காளம், அஸ்ஸாம், மற்றும் தென்னிந்தியாவில் 1945-46ல் , தாழ்த்தப்பட்டவர்களுக்காக நன்கொடை திரட்டும் காந்தி. சில புகைப்படங்களில் அவர் ரெயில் பெட்டியிலிருந்து கையை வெளியே நீட்டி நிதி திரட்டுகிறார். வேறு சில புகைப்படங்களில் அவர் மக்கள் புடை சூழ ஒரு கூடையில் பணம் திரட்டுகிறார்.
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, காந்தியை எந்த நேரத்திலும் புகைப்படமெடுக்க அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் என்ற வகையில், கானு காந்தி அவரை தினமும் படமெடுத்துக் கொண்டிருந்தார்.
புகைப்படங்கள்: கானு காந்தி)
படக்குறிப்பு, மும்பையில் 1945ல் , பிர்லா மாளிகையில், ஒரு எடை காட்டும் கருவியில் ஏறி நின்று தனது எடையைப் பார்க்கும் காந்தி. பல முறை சுதந்திரப் போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த காந்தி, தனது எடை குறித்து கவனமாக இருந்தார்.