வான் வழியே இந்தியா-சில காட்சிகள்

வானிலிருந்து இந்தியாவின் சில பிரசித்தி பெற்ற கட்டிடங்கள், காட்சிகளை, ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் அமோஸ் சாப்பல் ( படத்தொகுப்பு)

மும்பையின் சாசூன் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகள் சில.
படக்குறிப்பு, ஆளில்லா விமானம் ஒன்றின் மூலமாக இந்தியாவின் பல்வேறு இடங்களைப் படம் பிடித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் அமோஸ் சாப்பல்- இந்தப் படத்தில் மும்பையின் சாசூன் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகள் சில.
வாரணாசியில் காலை நேரத்தில் கங்கை நதி
படக்குறிப்பு, வாரணாசியில் காலை நேரத்தில் கங்கை நதி-- " இந்தியாவில் பல மிக அழகிய கட்டிடங்கள் இருக்கின்றன. அவைகள் பல நூற்றாண்டுகளாகவே இது போல வானிலிருந்து பார்க்கப்படவில்லை என்பதால், இது போன்ற வானிலிருந்து புகைப்படங்களை எடுப்பது உற்சாகத்தைத் தருகிறது" என்கிறார் புகைப்படக்கலைஞர் அமோஸ் சாப்பல்
தாஜ் மஹால்
படக்குறிப்பு, உலக அதிசயங்களில் ஒன்றாக அடிக்கடி வர்ணிக்கப்படும் 17ம் நூற்றாண்டு வெண் பளிங்கு தாஜ் மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டப்பட்டது. பிரசவ நேரத்தில் அவர் இறந்தார். இந்தப் படத்தில் காலையில் முதன் முதலாக தாஜ் மஹாலைப் பார்க்கவரும் சுற்றுலாப்பயணிகள்
குஸ்தி போடும் மல்யுத்த வீரர்கள்
படக்குறிப்பு, குஸ்தி போட்டுக்கொண்டு இருக்கும் இரு மல்யுத்த வீரர்கள். குஸ்தி என்பது 3000 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வரும் ஒரு விளையாட்டு.
தாமரைக் கோயில், டில்லி
படக்குறிப்பு, டில்லியில் உள்ள பஹாய் மத வழிபாட்டிடம். தாமரை வடிவத்தில் அமைந்த இந்த இடம் காலை நேரத்தில் தோன்றும் காட்சி
வாரணாசியில் இந்துக்கள்
படக்குறிப்பு, ஹிந்துக்களின் புனித நகராகக் கருதப்படும் வாரணாசியில், கங்கை நதியின் மறு கரையில் வழிபடவும் குளிக்கவும் குழுமியிருக்கும் இந்துக்கள்
டில்லியின் ஜும்மா மசூதி
படக்குறிப்பு, டில்லியின் ஜும்மா மசூதி. முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1650க்கும் 1658க்கும் இடையே கட்டப்பட்டது இந்த மசூதி
மும்பையின் மூன்றாம் குன்று
படக்குறிப்பு, "மூன்றாம் குன்று" என்று அழைக்கப்படும் இந்த குன்று மும்பையின் வடபுறத்தில் உள்ள குப்பங்களுக்கு மேலே அமைந்திருக்கிறது. குடி தண்ணீர் இல்லாத இந்த குன்றுக்கு பெரிய மதிப்பில்லை. அங்கிருந்து கிடைக்கும் காட்சியை விட குடிதண்ணீருக்கே மதிப்பு அதிகம்
ஹுமாயூன் சமாதி
படக்குறிப்பு, டில்லியில் உள்ள 16ம் நூற்றாண்டு சின்னமான, ஹுமாயுன் சமாதி. 1565ம் ஆண்டு, ஹுமாயுன் இறந்து 9 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்ட இந்த சமாதி, பாரசீக கட்டிடக்கலைஞர் மிராக் மிர்ஸா கியாஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
கொல்கத்தாவின் விக்டோரியா நினைவுக் கட்டிடம்
படக்குறிப்பு, பிரிட்டிஷ் பேரரசி விக்டோரியா நினைவாக கொல்கத்தா நகரில் கட்டப்பட்ட இந்த 20 நூற்றாண்டின் ஆரம்ப காலக் கட்டிடம், பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்ஸான் பிரபுவால் கட்டப்பட்டது. தாஜ்மஹாலுக்கு அடுத்து இரண்டாவது மிக அழகிய, வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடமாக இது கருதப்படுகிறது.