''முடிந்தால் கைது செய்யுங்கள்’’ - வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை இன்று காலை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ''வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யவும். பொய் வழக்குகளைப் போட்டு ஜனநாயகக் குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாகச் சொல்கிறேன், உங்களுக்கு 24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்