தூத்துக்குடி துப்பாக்கி சூடு - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

காணொளிக் குறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் ஒருங்கிணைப்பு இல்லை என்பது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், மாவட்ட ஆட்சியர் மீதும் பல குற்றச்சாட்டுகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை அதிகாரிகள் 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள மற்ற விவரங்களை அறிய இந்த காணொளியை காணுங்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: