ஊர் மக்களுக்கு உயிர்க்கோழி, மது பாட்டில் - எங்கே நடந்தது இது?

காணொளிக் குறிப்பு, மதுவும் உயிர்க் கோழியும் வழங்கிய நிர்வாகிகள் - இந்த சம்பவம் எங்கே நடந்துள்ளது தெரியுமா?

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த ராஜனாலா ஸ்ரீஹரி, தன் பகுதி மக்களுக்கு இலவசமாக மதுபாட்டில்கள் மற்றும் உயிருள்ள கோழிகளை வழங்கிய நிலையில் அதை மக்கள் நீண்ட வரிசையில் இருந்து காத்திருந்து பெற்று கொண்டனர்

டிஆர்எஸ் கட்சியை தேசிய கட்சியாக கே.சந்திரசேகர ராவ் அறிவிக்கும் முன்னதாக நடந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று மாநில கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதியை தேசிய கட்சியாக பதிவு செய்து 'பாரத் ராஷ்டிர சமிதி' என்று அறிவித்தார் சந்திரசேகர ராவ்.

இதைக் கொண்டாடும் விதமாக, அக்கட்சியைச் சேர்ந்த ராஜனாலா ஸ்ரீஹரி, தன் பகுதி மக்களுக்கு இலவசமாக மதுபாட்டில்கள் மற்றும் உயிருள்ள கோழிகளை வழங்கினார். இதனை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இவற்றைப் பெற்றனர். இந்த காணொளி தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: