தானேவில் கவிழ்ந்த பள்ளி பேருந்து - கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து
சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி பேருந்து ஓன்று, எதிர்பாராத விதமாக பின்னோக்கி வந்து கவிழ்ந்து விழும் சிசிடிவி காட்சிதான் இது.
இந்த விபத்தில் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. எனினும், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் குழந்தைகள் விரைவாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிழக்கு அம்பர்நாத் கிரீன் சிட்டி வளாகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் முழுவதும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இது தொடர்பாக பள்ளி பேருந்தின் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்