நிர்மலா சீதாரமன்: ரேஷன் கடையில் நரேந்திர மோதி படம் வைக்க வாக்குவாதம் - வைரல் வீடியோ
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆட்சியரிடம் தொடர் கேள்விகள் கேட்டார்.
அதைத் தொடர்ந்து தெலங்கானாவின் ரேஷன் கடைகளுக்கு வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாநில, இந்திய அரசின் பங்குகள் குறித்து சில தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தோராயக் கணக்கீடுகள் செய்து பேசினார்.
ஆனால், இறுதியில் இவ்வளவு செய்யும் இந்திய அரசின் பிரதமர் படத்தைக் கொண்டு ஒரு பேனர் கூட இல்லை என்று பேசியதோடு, எங்கள் பணியாளர்கள் பேனர் வைப்பார்கள்," என்றவர், ஒரு கலெக்டராக அதை சேதமடையால் கிழியாமல் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றும் பேசினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்