மாணவர்களுக்கு சொந்த செலவில் அலைபேசி: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணியாற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை 30 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும், அவர் தினமும் மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருகிறார்.
மாணவர்களுக்கு இவர் பாடம் கற்பிக்கும் முறை குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
தயாரிப்பு & ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு - நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்