பொறியியல் கலந்தாய்வு எப்படி நடக்கிறது? எந்தச் சுற்றில் என்னென்ன நடைமுறைகள்?

காணொளிக் குறிப்பு, பொறியியல் கலந்தாய்வு எப்படி நடக்கிறது? எந்தச் சுற்றில் என்னென்ன நடைமுறைகள்?

பொறியியல் படிப்பது பலருடைய கனவாக இருக்கும். இந்தக் காணொளியைப் பார்க்கும் நீங்களோ, உங்களுடைய தம்பி தங்கைகளோ, மகன் அல்லது மகளோ இப்போது பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேர ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள்.

www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பீர்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு இணையம் வழியாக நடந்து, மாணவர்களுக்கான ரேங்கிங் வெளியிடப்பட்டுள்ளது. இதெல்லாம் முடிந்து பொறியியல் கலந்தாய்வு தொடங்கிவிட்டது.

சரி, பொறியியல் கலந்தாய்வில் என்ன நடக்கும், உங்களுக்குப் பிடித்த கல்லூரி மற்றும் படிப்பை தேர்வு செய்வது எப்படி என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: