செஸ் ஒலிம்பியாட்: இசை கலைஞர் சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்த தமிழ்நாடு முதல்வர்

காணொளிக் குறிப்பு, செஸ் ஒலிம்பியாட்: இசை கலைஞர் சிவமணியுடன் டிரம்ஸ் வாசித்த தமிழ்நாடு முதல்வர்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவின் தொடக்கமாக டிரம்ஸ் மணியின் சிலிர்ப்பூட்டிய மின்னணு டிரம்ஸ், இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் வீணை, கீ போர்டு கலைஞர் ஸ்டீஃபன் தேவசி, புல்லாங்குழல் இசைக்கலைஞர் நவீன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ஸ் மணி தனக்கே உரிய பாணியில் டிரம்ஸ் வாசித்தபடி முதல்வர் இருந்த பகுதிக்கு வந்து அவரையும் டிரம்ஸ் வாசிக்க ஊக்கப்படுத்தினார்.

લાઇન

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: