LGBTQ+: "எங்களுக்கும் திருமணம் செய்ய சட்டப்பூர்வ உரிமை வேண்டும்"
தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினர் தங்கள் பாலின உரிமைகளைக் கொண்டாடும் வகையில், ஜூன் மாதம் சுயமரியாதை (Pride) மாதத்தை முன்னிட்டு, சுயமரியாதை பேரணியை 26-ஆம் தேதி நடத்தினர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினரின் சமூக அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள், கொள்கைகள், பிற செயல்களைக் கொண்டாடும் விதமாகவும் எங்களின் பாலின மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களை மறுக்கும் சமூகக் கட்டமைப்புகளை எதிர்க்கும் வகையிலும் அதற்கான போராட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவோம் என்ற உறுதி மொழியைப் புதுப்பிக்கும் வகையிலும், ஞாயிறு ஜூன் 26-ஆம் தேதி தன்பாலின மற்றும் பால் புதுமை சமூகத்தினரும் அவர்களின் ஆதரவாளர்களும் சென்னை எழும்பூரில் உள்ள லாங்க்ஸ் தோட்டம் சாலையில் பேரணியாகச் சென்றனர்.
தயாரிப்பு: க.சுபகுணம்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்