அரிதிலும் அரிதான ‘பாம்பே ஓ’ ரத்த வகை: ரத்த தானம் செய்யும் கொடையாளர்கள்
உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி,அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, உயிர்காக்க உதிரம் கொடுக்க வேண்டும் என்பதே.
ரத்தம் இல்லாமல் ஒருவர் உயிரிழக்கிறார் என்றால், ரத்த வகையை அறிந்துகொள்ளாமல் இருப்பதே அதற்கு முக்கியக் காரணம். 'பாம்பே ஓ' என்று ஒரு ரத்த வகையா என்று ஆச்சர்யத்தோடும் கேள்வியோடும் கேட்பவர்கள் அதிகம்.
அதே கேள்வியோடு, சேலம் அரசு மருத்துவமனையில் 'பாம்பே ஓ' ரத்த வகையுள்ள கொடையாளர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் மணிபிரகாஷ் ஆகியோரைச் சந்தித்தபோது, 'பாம்பே ஓ' குறித்தும் அவர்களுடைய அனுபவங்கள் குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பு: பி.சுதாகர்
படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்