அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை – யார் காரணம்?
இரண்டாம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி, இருபத்துயோராம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறையவே இல்லை.
"கணவன் அல்லது உறவினர்களால் கொடுமை" என்ற சட்டப்பூர்வ வார்த்தையின் கீழ் பெரும்பாலும் புகாரளிக்கப்படும் குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைக் குற்றமாகும்.
குற்றத் தரவுகள் கிடைக்கப்பெறும் கடைசி ஆண்டான 2020 இல், 1, 12, 292 பெண்களிடமிருந்து காவல்துறை புகார்களைப் பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடக்கிறது.
இத்தகைய வன்முறை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்று சொல்ல முடியாது. உலகளவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்கிறார், அதில் பெரும்பாலானவை நெருங்கிய துணையால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் புள்ளிவிவரங்களும் இதே போலத்தான் உள்ளன. இதை விவரிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்