இந்திய ஹாக்கி அணியில் தமிழக தொழிலாளி மற்றும் காவலாளியின் மகன்கள்

காணொளிக் குறிப்பு, இந்திய ஹாக்கி அணியில் தொழிலாளி மற்றும் காவலாளியின் மகன்கள்

திறமையும் முயற்சியும் இருந்தால் போதும் நாம் விரும்பிய உயரத்தை தொடலாம், என்பதற்கு கண்முன் உதாரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர், விளையாட்டுத்துறையில் கவனம் ஈர்த்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தீப்பெட்டித் தொழிற்சாலை தொழிலாளி மகன் மாரீஸ்வரன்.

அரியலூர் அரசு கல்லூரி இரவு காவலாளி மகன் கார்த்திக் இருவரும் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணி இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.

தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்கி, பயிற்சி பெற்றவர்கள் இருவர் குறித்தும் பார்க்கலாம்.

தயாரிப்பு - ஜோ மகேஸ்வரன்

ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்த், அருண்குமார்

படத்தொகுப்பு - நடராஜ் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: