பிரசாந்த் கிஷோர் பார்வையில் சிறந்த காங்கிரஸ் தலைவர் யார்? பிபிசிக்கு அளித்த பேட்டி

காணொளிக் குறிப்பு, பிரசாந்த் கிஷோர் பார்வையில் சிறந்த காங்கிரஸ் தலைவர் யார்?

பிபிசி உடனான சிறப்புக் கலந்துரையாடலின்போது பிரசாந்த் கிஷோர், "சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதே எனது முதலாவது தேர்வு," என்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்துக்கு காண்பித்த காணொளி காட்சி விளக்கத்தின்போது பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாக ஊகங்கள் நிலவின. உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் தேர்தல் பொறுப்பை கவனித்தார்.

ஆனால் பிபிசியுடனான உரையாடலின்போது அந்த ஊகங்கள் அனைத்தையும் நிராகரித்தார் பிரசாந்த் கிஷோர்.

செய்தியாளர் - சரோஜ் சிங்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :