தடைகளை வென்ற சாதனை இளைஞர் வெங்கட சுப்ரமணியன்

புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட சுப்ரமணியன் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இடது கை குறைபாட்டுடன் பிறந்த வெங்கட சுப்பிரமணியன் தனது தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சியின் காரணமாக கல்வி, இசை, கராத்தே, நீச்சல், சமூகப் பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப் பணி என பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.

இதைப் பாராட்டி கடந்த ஆண்டு ஜனவரி மாதம், குடியரசுத் தலைவரால் அவருக்கு பால் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளியான இவரது பணிகளை சிறப்பித்து போற்றும் வகையில் இந்திய அரசின் சமூகநீதி அதிகாரம் அளித்தல் துறை மூலம் இந்த ஆண்டின் சிறந்த ஆற்றல் உள்ள நுண்ணறிவு மிக்கவர் என்ற தேசிய விருதை பெற்றார். கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி குடியரசு தலைவர் இவ்விருதினை வழங்கினார்.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: