ராமேஸ்வரம் மீனவர் வாழ்வு கண்ணீரில் மிதப்பது ஏன்? எல்லை தாண்டும் நிலைமை ஏன் ஏற்படுகிறது? TamilNadu on wheels

காணொளிக் குறிப்பு, எல்லை தாண்டும் நிலைமை ஏன் ஏற்படுகிறது? கண்ணீர் கடலில் மிதக்கும் மீனவர் வாழ்வு

(சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நான்கு இளம்பெண்கள் பிபிசி தமிழுடன் இணைந்து திருவண்ணாமலை தொடங்கி ராமேஸ்வரம் வரை மோட்டார் சைக்கிளில் 1,300 கி.மீ. பயணித்து பல்வேறு இடங்களில் மக்களின் வாழ்க்கையை, அது சந்திக்கும் நெருக்கடிகளை கேட்டறிந்தனர். TamilNadu on wheels என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தின் இறுதி மற்றும் 4வது பாகத்தில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை சந்தித்து உரையாடிய பைக்கர் பெண்களின் அனுபவங்கள் இந்த காணொளியில்...)

கடலில் இந்திய எல்லையைத் தாண்டுவதாக அடிக்கடி குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், தாக்குவதும் செய்தியாகி முடிந்துவிடுகின்றன. இந்த நெருக்கடிக்கு தமிழ்நாடு மீனவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?

இந்த அச்சுறுத்தல் மீனவர் சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? பிபிசி தமிழின் TamilNadu on wheels பயணத்தில் பைக்கில் சென்ற பெண்கள் நேரில் கண்டறிந்த உண்மைகள் என்ன?

செய்தி: அபர்ணா ராமமூர்த்தி, பிரபுராவ் ஆனந்தன்.

ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: நேஹா, ஆமிர் பீர்ஸாதா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: