நரிக்குறவர் சமூகத்தின் கல்வி அடையாளமான கௌசல்யா #iamthechange

காணொளிக் குறிப்பு, நரிக்குறவர் சமூகத்தின் கல்வி அடையாளமாய் கௌசல்யா #iamthechange

நரிக்குறவர் சமூகத்தில் பிறந்த கௌசல்யா, இப்போது தம் சமூகத்தில் கல்வியின் அடையாளமாக மாறியிருக்கிறார். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் இவர்.

13 வயது வரை பெற்றோருடன் சேர்ந்து இவர் ஊசி மணி, பாசி மணி விற்பது, பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பது போன்ற வேலைகளை செய்தார்.

பிறகு விளிம்புநிலை குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தில் சேர்ந்து படித்தார். இப்போது செவிலியர் கல்லூரியில் படிக்கிறார்.

கல்வியில் இவர் கண்ட முன்னேற்றம், இவரது சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் பலருக்கு கல்வி மீது ஆர்வத்தை தூண்டியுள்ளது.

தனது சமூக மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதி கிடைக்க உழைப்பதே லட்சியம் என்கிறார் கௌசல்யா.

காணொளி தயாரிப்பு: மரிய மைக்கேல்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: