மிஸ் இந்தியா- மிஸ் வேர்ல்டு: மானுஷி சில்லரின் சாதனை பயணம் (புகைப்பட தொகுப்பு)

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டிற்கான 'மிஸ் வேர்ல்டு' எனப்படும் உலக அழகிப் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த 20 வயதான மானுஷி சில்லர் வென்றுள்ளார்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு முன்பு, கடந்த 1966-ஆம் ஆண்டில் இந்தியாவின் ரீட்டா ஃபரியா உலக அழகிப் பட்டத்தை வென்றார். அதன்பிறகு ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டும், டயானா ஹேடன் 1997-ம் ஆண்டும், 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ராவும் இப்பட்டத்தை வென்றுள்ளனர்,
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சீனாவில் சான்யா நகரில் நடந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 118 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மானுஷி சில்லர் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Manushi/Instagram

படக்குறிப்பு, மானுஷி சில்லர் பாரம்பரிய நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Manushi/Insta

படக்குறிப்பு, மிஸ் இந்தியா பட்டம் வென்றபிறகு, உலக அழகிப் பட்டத்திற்கு தயாரானார். தற்போது இப்பட்டத்தையும் வென்றுள்ளார்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Manushi/Instagram

படக்குறிப்பு, இவர் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். ஆழ்கடல் நீச்சல்(ஸ்கூபா டைவிங்), பாராகிளைடிங் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கிறார்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், MANOJ DHAKA

படக்குறிப்பு, இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது இவரது லட்சியம்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Manushi/Instagram

படக்குறிப்பு, கிராமப்புறங்களில் லாப நோக்கமல்லாத மருத்துவமனைகளை திறக்க மானுஷி சில்லர் விரும்புவதாக மிஸ் வேர்ல்டு வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், MANOJ DHAKA

படக்குறிப்பு, "என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என் தாயார்தான். அம்மாவாக இருப்பதே சிறந்த பணி'' என போட்டியின் கடைசி கேள்வியில் பதிலளித்தார்
மானுஷி சில்லர்

பட மூலாதாரம், Manushi/Instagram

படக்குறிப்பு, ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஹரியானா மாநிலத்தை சேந்தவர் இவர்